முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இப்படியெல்லாம் கூடவா இருப்பாங்க? இணையத்தில் வைரலாகும் ‘ரூம் மேட்’ விளம்பரங்கள்! 

இப்படியெல்லாம் கூடவா இருப்பாங்க? இணையத்தில் வைரலாகும் ‘ரூம் மேட்’ விளம்பரங்கள்! 

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Trending | 44 வயதான நபர் ஒருவர், தனது வயதிற்கு பாதிக்கு குறைவான பெண்ணை ரூம் மேட்டாக தேடும் விளம்பரம் வைரலாகி வருகிறது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பேச்சிலருக்கு வீடு கிடைப்பது என்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பிரச்சனையான விஷயமாக இருந்தாலும், வெளிநாடுகளில் இளைஞர்கள் அல்லது இளம் பெண்கள் இணைந்தோ, தனித்தனியாகவோ வசிக்க எளிதாக வீடுகள் வாடகைக்கு கிடைப்பது உண்டு. சிங்கிள் அல்லது டபுள் பெட்ரூமில் வசிக்கும் நபர், தன்னுடன் வசிக்க மற்றொரு ரூம் மேட் வேண்டும் என்றால் சோசியல் மீடியா அல்லது இணையதளங்களில் விளம்பரங்களைப் பதிவிடுவதை இயல்பாக பார்த்திருப்போம். அதில் பொதுவாக செல்லப்பிராணிக்கு அனுமதி இல்லை, குடிக்கவோ, புகைபிடிக்கவோ கூடாது, ஆண் அல்லது பெண் பார்ட்னரை அழைத்துவரக்கூடாது, அறையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் போன்ற கன்டிஷன்கள் இருக்கும். ஆனால் மிகவும் வித்தியாசமான கன்டிஷன்களுடன் சிலர் பதிவிட்டுள்ள விளம்பரங்களை தற்போது பார்க்கலாம்...

அமெரிக்காவின் டெட்ராய் பகுதியில் வசித்து வரும் 44 வயதான நபர் ஒருவர், தனது வயதிற்கு பாதிக்கு குறைவான பெண்ணை ரூம் மேட்டாக தேடும் விளம்பரம் வைரலாகி வருகிறது. அதில், சமைக்கவும், வீட்டை சுத்தப்படுத்தவும் விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும். வீட்டில் ஒரே ஒரு படுக்கை அறை மட்டுமே உள்ளது, அதனை பகிர்ந்து கொள்ளும் விருப்பம் வரும் வரை வெளியே உள்ள கவுச்சில் படுத்துறங்கலாம். செல்லப்பிராணி, சரக்கு மற்றும் போதைப் பொருள் பயன்படுத்த அனுமதியில்லை, குறிப்பாக ஆண் நண்பர்கள் வரவேக்கூடாது என ஏகப்பட்ட கன்டிஷன்களை போட்டுவிட்டு கடைசியாக வாடகையாக 400 டாலர்களை ஷேர் செய்து கொள்ள வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

கிரெய்க்லிஸ்டில் பகிரப்பட்ட மற்றொரு விளம்பரத்தில், 53 வயது ஆண் ஒருவர், தனக்கு காதலியாகவோ அல்லது மனைவியாகவோ மாறக்கூடிய பெண்ணை ரூம் மேட்டாக தேடி வருகிறார். தன்னுடன் ஷாப்பிங் வருவது, முத்தம் மற்றும் மசாஜை பகிர்ந்து கொள்வது, உணவு சமைப்பது போன்றவற்றில் விருப்பம் இருக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு குழந்தை இருக்கக்கூடாது, மது மற்றும் போதைப்பழக்கம் இருக்கக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதித்துள்ளார்.

Read More : டாக்டரின் கையெழுத்தா இது..! இணையத்தை ஆச்சரியப்படுத்திய கேரள மருத்துவர்

இதேபோல் மற்றொரு விளம்பரத்தில் ஏற்கனவே 4 பேர் தங்கியுள்ள அறையில் 5வது நபராக இணைய விரும்பமுள்ளவர் நிறவெறி இல்லாதவராக இருக்க வேண்டும் எனா ஓபனாக குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் தங்களது அறையில் கரப்பான் பூச்சி தொல்லை இல்லை என்றும், கரப்பான் பூச்சிக்கு அனுமதியில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலே இருக்கும் எல்லா பதிவிற்கும் டப் கொடுக்கும் விதமாக டென்ட் ஒன்றில் தன்னுடன் வசிக்க ரூம் மேட் தேவை என ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏனெனில் அந்த நபர் வசித்து வரும் கூடாரத்தில் ஏற்கனவே இரண்டு பேர் உள்ளனர். அதில் மூன்றாவதாக வசிக்க ஒருநபரை தேடி வருகிறாராம். அப்படியானால் எவ்வளவு பெரிய கூடாரத்தில் நீங்கள் வசித்து வருகிறீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

First published:

Tags: Trending, Viral