முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / சேற்றில் சிக்கிய யானைகள்..! தாயை எழுப்பிய குட்டி யானை..! வைரலாகும் வீடியோ..

சேற்றில் சிக்கிய யானைகள்..! தாயை எழுப்பிய குட்டி யானை..! வைரலாகும் வீடியோ..

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வீடியோவை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள், இது தான் உண்மையான பாசம், தாய் மற்றும் குழந்தையின் பாசத்திற்கு ஈடு எதுவும் இல்லை என்பதை உலகறியச் செய்துள்ளது என்றும் டிவிட் செய்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகில் உள்ள மற்ற ஜீவராசிகளை விட அதிக கோபம் மற்றும் பாசத்தைக் கொண்ட விலங்கு என்றால் அது யானை மட்டும் தான். தன்னையும், தன்னுடைய குட்டிகளையும் அதீத அக்கறையோடும், எந்த தீங்கும் நேர்ந்து விடக்கூடாது என்று நினைக்கும் விலங்குகளில் ஒன்றான யானை கொண்டுள்ள பாசத்திற்கு அளவே கிடையாது. இந்த பாசத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையிலான வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது. இதோ இந்த வீடியோவில் என்ன இருந்தது? என நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

குட்டி யானை தாய் மீது கொண்டுள்ள பாசம் : தாய் யானை மற்றும் குட்டி யானை ஒன்று திறந்தவெளியில் இருந்த சேற்றில் சிக்கியது இருப்பது போன்று வீடியோ தொடங்குகிறது. இதைக்கண்ட சுற்றுலாப் பயணிகள் எப்படியாவது இந்த இரு யானைகளை மீட்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். பின்னர் மீட்புப் பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மீட்புக்குழுவினர் விரைந்து காப்பாற்ற முயற்சி எடுத்தனர். குட்டி யானையை முதலில் மீட்க முயற்சித்த நிலையில், ஒரு கயிறைக் கட்டி இழுத்தனர்.. பல மணி நேரத்திற்குப் பிறகு குட்டி யானையை சேற்றில் இருந்து மீட்டனர்.

பின்னர் தாய் யானையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்? என்ற நோக்கத்தில், அதற்கான மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்தினர் மீட்புக்குழுவினர். ஆனால் தன் தாயின் மீது கொண்ட பாசத்தினால், சேற்றில் இருந்து மீட்கப்பட்ட யானை, அம்மாவை விட்டு வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது. இந்த குட்டி யானையின் பிடிவாதம் மீட்புக்குழுவினருக்கு இடைஞ்சலாக இருந்துள்ளது.

Read More : ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் ஏன் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்படுகின்றன தெரியுமா..?

பின்னர் ஊசி செலுத்தி குட்டி யானையை மயக்கமடைய செய்தனர். தாய் யானைக் காப்பாற்றுவதற்காக, ஒரு குழி தோண்டி யானையை வெளியே எடுக்க இடம் ஒதுக்கியுள்ளனர். ஒரு பெரிய கயிறை யானையின் மீது கட்டி, பெரிய டிரக்குகளில் கட்டி இழுப்பதற்கானப் பணிகளை மேற்கொண்டனர். இறுதியில் எப்படியோ மிகுந்த சிரமத்துடன் யானையை சேற்றில் இருந்து மீட்டு வெளியில் எடுத்துவிட்டனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு யானை மீட்கப்பட்டதால் மயக்கத்துடன் விழுந்து கிடந்தது.

இதையடுத்து ஏற்கனவே ஊசி போட்டு மயக்கமடைய செய்த குட்டி யானையை மீண்டும் ஒரு ஊசி போட்டு எழுப்பி விட்டனர் மீட்புப்படையினர். மயக்கம் தெளிந்து வெளியே வந்ததும் தன் தாயைத் தேடி மீண்டும் அந்த இடத்திற்கு சென்றது குட்டியானை. தனது துதிக்கையால் தாயின் முகத்தை வருடிய போது நினைவு திரும்பியது தாய் யானைக்கு. இறுதியில் சேற்றில் இருந்து மீட்கப்பட்ட தாய் மற்றும் குட்டி யானை சேர்ந்து மகிழ்ச்சியுடன் சென்ற காட்சியைத் தான் ஐஏஎஸ் அதிகாரி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுயிருந்தார்.

இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள், இது தான் உண்மையான பாசம், தாய் மற்றும் குழந்தையின் பாசத்திற்கு ஈடு எதுவும் இல்லை என்பதை உலகறியச் செய்துள்ளது என்றும் ட்விட் செய்து வருகின்றனர். மனிதர்கள் உருவத்தில் சில நேரங்களில் கடவுளும் இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தும் வகையில் இது அமைகிறது எனவும் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். இந்த யானையின் மீட்பு காட்சியை அப்பகுதியைச் சேர்ந்த கிராம வாசிகள் பார்த்து ரசித்தனர்.

First published:

Tags: Elephant, Trending Video, Viral Video