ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

எனக்கொரு ப்ளேட் கொடுங்க..பானிப்பூரி சாப்பிடும் யானை..வைரலாகும் வீடியோ!

எனக்கொரு ப்ளேட் கொடுங்க..பானிப்பூரி சாப்பிடும் யானை..வைரலாகும் வீடியோ!

பானிப்பூரி சாப்பிடும் யானை | வைரல் வீடியோ

பானிப்பூரி சாப்பிடும் யானை | வைரல் வீடியோ

Trending | ஒரு யானை ஒரு நாளைக்கு ஏறக்குறைய 350 கிலோ உணவு சாப்பிடுமாம், 250 லிட்டர் தண்ணீர் குடிக்குமாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ”உருவத்தை வைத்து எடை போடாதீர்கள் ஆளு பாக்க தான் இப்படி ஆன மனசு குழந்தை மாதிரி” என்று சொல்வார்களே அது யானை விஷயத்தில் உண்மை தான் போலும். சிறு வயது முதல் யானை மணியோசைக் கேட்டால் ஓடி சென்று தெருவோரம் பார்ப்பது அதற்கு பழம் காசு கொடுப்பது நமக்கு வழக்கமாக இருக்கும். இன்னும் சில பேர் யானை சவாரியெல்லம் கூட செய்திருப்போம். இப்படி பார்க்கவும் அதைப்பற்றி பேசவும் அழுக்காத உயிரினம் யானை.

  அதே போல் குடியிருப்பு பகுதிகளில் யானை இறங்கிவிட்டது பொருட்கள் வீடுகளை நாசம் செய்து விட்டது என்ற வீடியோக்களை பார்க்கும் போது கூட “ அடேங்கப்பா யனை எப்படி இருக்கு பாரு” என பார்ப்பதுண்டு. சில யானைகள் வாகன ஓட்டிகளுக்கு வழிவிடுவதைப் பார்த்து “ரொம்ப நல்ல யானைல” என நினைப்பதுண்டு.

  அப்படிப்பட்ட ஒரு யானையின் வீடியோ தான் இங்கு வைரலாகி வருகிறது. யானையும் மனிதரோடு மனிதராக தெருவோர பானிப்பூரிக் கடையில் நின்று பானிப்பூரி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது. பானிப்பூரி கடைக்காரர் ஓவ்வொரு பூரியாக எடுத்து மசாலா பானி வைக்கும் வரை காத்திருந்து தனது தந்ததால் அதை வாங்கி அழகாக வாயில் போட்டுக்கொள்கிறது. இப்படி எந்த வித அலட்டலும் இல்லாமல் பானிப்பூரியை சுவைத்துக்கொண்டிருக்கிறது அந்த வளர்ந்த பெரிய குழந்தை.

  ஒரு யானை ஒரு நாளைக்கு ஏறக்குறைய 350 கிலோ உணவு சாப்பிடுமாம், 250 லிட்டர் தண்ணீர் குடிக்குமாம். அப்படிப்பட்ட யானை தன்னையும் மறந்து பானிப்பூரிக்காக காத்திருக்கும் காட்சியை காணும் போது அது மனிதனுடன் எந்த அளவு பக்குவப்படிருக்கும் இந்த வாழ்க்கை முறைக்கு மாறியிருக்கும் என்று தான் எண்ண தோன்றுகிறது. எப்படியோ யானைக்கும் பானிப்பூரி பிடித்திருக்கிறது போல.

  இந்த வீடியோவை CNN அவர்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ அஸ்ஸாம் மாநிலத்தில் குவகாத்தியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ நெட்டிசன்களால் பகிரப்பட்டும் பாராட்டப்பட்டும் வருகிறது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Elephant, Trending News, Viral Video