விவாகரத்து அழைப்பிதழ்- பந்தாவான இந்தியத் திருமணங்களை கலாய்க்கும் ஓவியர்...!

கோடிகளில் செலவு செய்யும் இன்றைய திருமணங்கள் விவாகரத்தில் முடிவதும் அதிகமாகி வருவதாகவும் வருத்தம் தெரிவிக்கிறார்.

விவாகரத்து அழைப்பிதழ்- பந்தாவான இந்தியத் திருமணங்களை கலாய்க்கும் ஓவியர்...!
விவாகரத்து அழைப்பிதழ்
  • News18
  • Last Updated: January 9, 2020, 4:29 PM IST
  • Share this:
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அதிகப் பொருட்செலவில் பந்தாவாக நடக்கும் திருமணங்களை விமர்சிக்கும் வகையில் பாகிஸ்தான் ஓவியர் ஒருவர் ‘விவாகரத்து அழைப்பிதழ்’ அச்சடித்துள்ளார்.

இரண்டு மனங்களுக்கு இடையே நடக்கும் திருமணத்தை அதிகப் பொருட்செலவில் வணிக ரீதியாக அணுகி திருமணத்தையே வணிகம் ஆக்கியுள்ளதாக பாகிஸ்ஹான் கலைஞர் ஒருவர் விமர்சித்துள்ளார். கோமல் ஆஷ் என்னும் அந்தக் கலைஞர் ‘திருமணம் என்பது இரு மனங்கள் எவ்வித சாதி, மத, இன, பாலின வேகுபாடுகள் இன்றி மனதுக்குப் பிடித்து நடக்க வேண்டும்’ எனக் குறிப்பிடுகிறார்.

கோடிகளில் செலவு செய்யும் இன்றைய திருமணங்கள் விவாகரத்தில் முடிவதும் அதிகமாகி வருவதாகவும் வருத்தம் தெரிவிக்கிறார். வணிக ரீதியான பந்தா திருமணங்களை கலாய்க்க ‘விவாகரத்து அழைப்பிதழ்’ அச்சடித்துள்ளார். இந்த விவாகரத்து அழைப்பிதழ் இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரலாகி வருகிறது.


விவாகரத்து அழைப்பிதழில், “21 வயதுப் பெண்ணைவிட இரு மடங்கு பெரிய ஆண் ஒருவருக்கு அப்பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர். இருவரின் சம்மதமே இல்லாமல் நடக்கும் திருமணங்கள் அதிகம். அதற்கு ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்? ஆனாலும், இந்த வணிகத் திருமணங்களில் சிக்கித் தப்பித்து சுதந்திரத்தைப் பெறப் போகும் பெண்கள் விவாகரத்தைக் கொண்டாடலாமே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கட்டாயத் திருமணம், குழந்தைத் திருமணம், சாதி, மதம், கெளரவத்துக்கான திருமணங்கள் ஆகியவற்றை விமர்சித்துப் பேசும் இந்த ’விவாகரத்து அழைப்பிதழ்’ ஆசிய நாடுகள் அனைத்திலும் வைரலாகி வருகிறது.


 
View this post on Instagram
 

SWIPE for back of card! I can't take weddings seriously, all I see are men twice the age of some scared 21 year old with her frontal lobe barely formed. They've probably barely interacted and it's the roll of a dice as to whether or not they're compatible. It's so risky, so insane, and so much money. So let's celebrate the girls who escape this and get divorced :D feminist blog @komalwritesalot . . . . . . . #pakistaniwedding #weddingcard #indianwedding #divorce #divorcequotes #savethedate #weddinginvitations #illustratedinvitation #celebritywedding #womanistan #womenartists #womenwhodraw #yarcollective #artoninstagram #desimemes #pakistanistreetstyle #pakistancreates #artstagram #weddingdress #indianart #indianartist #pakistani #illustration_best #illustration #girlsdrawinggirls #digitalportrait


A post shared by Art by Komal Ash (@komalash) on


மேலும் பார்க்க: விமானம் கிளம்பும்போது கழண்டு விழுந்த சக்கரம்... வீடியோ எடுத்த விமானப் பயணி..!
First published: January 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்