ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நம்ம ஊர் தோசையை போலவே போடப்படும் சீன பேன்கேக்.. இணையத்தில் உலவும் வைரல் வீடியோ

நம்ம ஊர் தோசையை போலவே போடப்படும் சீன பேன்கேக்.. இணையத்தில் உலவும் வைரல் வீடியோ

சீன பேன்கேக்- தோசை

சீன பேன்கேக்- தோசை

மாவை ஊற்றுவதும், பேன்கேக்கை கல்லில் இருந்து எடுப்பதும்,பார்ப்பதற்கு தோசையை கல்லில் ஊற்றி சட்டுவத்தால் திருப்புவது போலவே உள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai |

  இணையத்தில் அதிகம் விரும்பப்படும் வீடியோக்களில் சமையல் வீடியோவும் ஒன்று. சமைப்பதற்காக பார்க்கிறார்களோ இல்லையோ உலகில் உள்ள உணவுகள் எல்லாம் எப்படி சமைக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள எல்லாருக்கும் ஒரு ஆர்வம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

  அதே போல் இணையத்திலும் உலகின் மூலை முடுக்குகளில் உள்ள உணவுகள் சமைக்கும் முறைகளும் வீடியோக்களாக உலா வந்துகொண்டே இருக்கிறது. அதுபோன்ற ஒரு வீடியோ இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

  நார்வேயின் முன்னாள் தூதரக அதிகாரி எரிக் சொல்ஹெய்ம் ட்விட்டரில் பகிர்ந்துள்ள கிளிப்பில் ஒரு சீன பேன்கேக் செய்யப்படுகிறது. அது பார்ப்பதற்கு தென்னிந்திய தோசை போலவே இருப்பது தான் ஆச்சரியமே.

  85 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த அமெரிக்க பயணியின் கேமராக்கள்.. புதைந்திருக்கும் பொக்கிஷம் - கனடாவின் பனிமலையில் மீட்பு

  அந்த வீடியோவில் ஒரு சீன பெண் பெரிய சுழலும் கல்லில் மாவை ஊற்றி மெல்லிய பேன்கேக்கை வார்க்கிறார். பின்னர் அந்த காகிதம் போன்ற மெல்லிய பேன்கேக்கை லாவகமாக கல்லில் இருந்து எடுத்து பெரிய வட்டமான தட்டில் அடுக்குகிறார்.

  அவர் மாவை ஊற்றுவதும், பேன்கேக்கை கல்லில் இருந்து எடுப்பதும்,பார்ப்பதற்கு தோசையை கல்லில் ஊற்றி சட்டுவத்தால் திருப்புவது போலவே உள்ளது. இதனை பார்த்து மாக்கள் பெரிதும் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.

  இந்த வீடியோ அக்டோபர் 29 அன்று  பகிரப்பட்டது. அதன் பிறகு சுமார்  இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் குவித்துள்ளது. பல இணைய பயனர்கள் சீன பேன்கேக் செய்முறைக்கும் இந்தியாவின் பிரபலமான உணவான தோசைக்கும் இடையே உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: China, Food, Viral Video