• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • வாஷிங்மெஷினுக்குள் இருந்த தேனீக்கள் - வெறும் கையால் அகற்றும் பெண்!

வாஷிங்மெஷினுக்குள் இருந்த தேனீக்கள் - வெறும் கையால் அகற்றும் பெண்!

வாஷிங்மெஷினுக்குள் தேனீக்கள்

வாஷிங்மெஷினுக்குள் தேனீக்கள்

அமெரிக்காவில் வாஷிங்மெஷினுக்குள் இருக்கும் தேனீக் கூட்டத்தை, பெண் ஒருவர் வெறும் கைகளால் அகற்றும் வீடியோ வைரலாகியுள்ளது.

  • Share this:
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வீட்டின் பின்புறம் பயன்படுத்தப்படாத வாஷிங்மெஷின் ஒன்று வைக்கப்பட்டிருந்துள்ளது. செடி, கொடிகள் நிரம்பியிருக்கும் அப்பகுதியில் வாஷிங் மெஷின் இருந்ததால் தேனீக்களுக்கு உகந்த இடமாக மாறியது. மரம் மற்றும் செடிகளின் கிளைகளில் தங்காத தேனீக்கள், வாஷிங்மெஷினுக்குள்ளேயே கூடு கட்டியுள்ளன.

அந்த வீட்டின் உரிமையாளர் வாஷிங் மெஷினுக்கு அருகில் செல்லும்போது தேனீக்கள் அதிக அளவில் இருப்பதை கண்டு பயந்துள்ளார். வீட்டைச் சுற்றியும் தேனீக்கள் அதிகளவு பறந்ததால், அவை கடிக்க வாய்ப்பிருப்பதாக எண்ணி, தேனீக்களின் கூட்டை அகற்ற முடிவு செய்தார்.

அதன்படி, தேனீக்களை லாகவமாக கையாளும் பெண் நிபுணர் எரிகா தாம்சனை அழைத்துள்ளார். உரிமையாளரின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற எரிக்கா தாம்சனுக்கு, பயன்படுத்தப்படாத வாஷிங் மெஷினை திறந்ததும் வியப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், சிறிதளவிலான தேனீக்கள் கூட்டம் இருக்கும் என எண்ணிய அவருக்கு, வாஷிங்மெனஷின் முழுவதும் தேனீக்கள் கூட்டமாக இருந்தது கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளார்.

ALSO READ |  நாயை கட்டிவைத்து இரக்கமே இன்றி அடித்து கொன்ற சிறுவர்கள்...ட்ரெண்டாகும் #JusticeForBruno ஹேஷ்டேக் !

எண்ண முடியாத அளவில் தேனீக்கள் கூட்டம் அந்த இடம் முழுவதும் மொய்க்கிறது. இதனை ரசிக்கும் எரிகா தாம்சன், தேனீக்கள் கடிக்கும் என்ற பயம் சிறிதும் இல்லாமல், அவற்றை தண்ணீரை அள்ளுவதுபோல் அள்ளி, மற்றொரு பெட்டியில் சேகரிக்கிறார். எரிகா தாம்சன் தேனீக்களை எடுத்து மற்றொரு பெட்டியில் வைக்கும் பணிகளை, அவருடன் சென்ற மற்றொருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள எரிகா, தேனீக்கள் சேகரிப்பதில் தனக்கு எப்போதும் அளவுகடந்த ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், டெக்சாஸ் வீட்டில் தேனீக்கள் சேகரித்ததைப் பற்றி எழுதியுள்ள பதிவில், வீட்டின் உரிமையாளர் தேனீக்கள் அதிகளவு இருப்பதை கூறி, அதனை வந்து அகற்றுமாறு தெரிவித்தாக கூறியுள்ளார்.

ALSO READ | டேய் பச்சைக்கிளி முதல ஒன்னு வலம் வருதாம்...மிடுக்காய் ஊருக்குள் நடந்து வந்த முதலை - வைரல் வீடியோ

ஏற்கனவே இதில் நிபுணத்துவம் பெற்ற தனக்கு, அவரின் அழைப்பை நிராகரிக்க மனமில்லை என்றும், அவரது அழைப்பின் பேரில் அங்கு சென்று பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். வீட்டின் பின்புறத்தில் மாற்று பயன்பாட்டுக்காக வைக்கப்பட்ட அந்த வாஷிங்மெஷினுக்குள் தேனீக்கள் கூட்டம் மிகுந்து இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்த அவர், அதனை பத்திரமாக சேகரித்துவிட்டதாக கூறியுள்ளார்.

 




 

தேனீக்களுக்கும் தனக்கும் நல்ல தொடர்பு இருப்பதால், தேனீக்களை வெறும் கைகளாலேயே சேகரிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். எரிகா தாம்சன் வெறும் கைகளால் தேனீக்களை சேகரிப்பதை பார்த்து பலரும் வியப்பை தெரிவித்துள்ளனர்.

அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ருசிகரமாக பதில் அளித்தார். உங்களை தேனீக்கள் கடிக்காதா? என நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த எரிக்கா, தனக்கு தேனீக்களை சேகரிப்பதில் மிகுந்த அனுபவம் இருப்பதாகவும், அவற்றுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அவை கடிப்பதில்லை எனக் கூறியுள்ளார். அவரின் இந்த பதிலையும் பலர் ரசித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: