ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தன்னை ஏமாற்ற நினைத்தவரை அன்பால் அடக்கிய சிறுமி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

தன்னை ஏமாற்ற நினைத்தவரை அன்பால் அடக்கிய சிறுமி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Viral Video : சிறுமி ஒருவர் ஐஸ்க்ரீம் வாங்கச் சென்ற இடத்தில் ஐஸ்க்ரீம் தருவதற்கு பதிலாக விளையாட்டாக அலைக்கழித்தவருக்கு ஆடிக் காட்டி அன்பை பொழிந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிறுமி ஒருவர் ஐஸ்க்ரீம் வாங்கச் சென்ற இடத்தில் ஐஸ்க்ரீம் தருவதற்கு பதிலாக விளையாட்டாக அலைக்கழித்தவருக்கு ஆடிக்காட்டி அன்பை பொழிந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அவினேஷ் சரண் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஐஸ்க்ரீம் கடைக்காரர் சிறுமிகளுக்கு ஐஸ்க்ரீம் வழங்குவதற்கு முன் விளையாட்டாக சில பாவனை செய்வார். பின்னர் ஐஸ்க்ரீம் வழங்குவர். இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். எனினும் இங்கு நடந்தது வேறு. இதில் குழந்தை ஐஸ்க்ரீம் வாங்கும் போது கடைக்காரர் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவிக்க குழந்தை உடனே அங்கு ஒலிக்கும் பின்னணி பாடலுக்கு நடனம் ஆடத் தொடங்குகின்றது.

உடனே கடைக்காரர் சிரித்த முகத்தோடு சிறுமியின் அருகில் வந்து முத்தமிட்டு உடன் ஆடி மகிழ்கின்றார். குழந்தையின் செயலுக்கு பலரும் ட்விட்டரில் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே சமீபத்தில் குழந்தைக்கு நாய் ஒன்று எப்படி தவழ்வது என கற்றுக்கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் பொமரேனியன் நாய் குழந்தைக்கு எப்படி தவழுவது என கற்றுக் கொடுப்பதை குழந்தை அப்படியே செய்தது. வீடியோவில் காணப்படும் சிறு குழந்தைக்கு தவழ தெரியாததால், முதலில் அந்த நாய் குழந்தைக்கு எதிர் திசையில் படுத்து கொண்டு எப்படி தவழுவது என செய்து காட்டுகிறது.

நாய் செய்ய செய்ய குழந்தையும் அதை பார்த்து தவழ முயற்சிக்கிறது. தொடர்ந்து குழந்தையை தவழ ஊக்கப்படுத்தும் வகையில் அருகே சென்று அதன் கன்னத்தில் மெலிதான முத்தம் ஒன்றை கொடுக்கும் அந்த நாய், பின்னர் குழந்தைக்கு முன்னால் வந்து சைடில் படுத்தப்படி மீண்டும் தவழுவதற்கான பாடத்தை கற்பிக்கிறது. இந்த வீடியோ இணையவாசிகள் இடையே சமீபத்தில் வைரலானது.

First published:

Tags: Viral Video