Home /News /trend /

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் | 3,425 மணல் லட்டுகளை கொண்டு உருவாக்கப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிற்பம்.!

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் | 3,425 மணல் லட்டுகளை கொண்டு உருவாக்கப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிற்பம்.!

மணல் சிற்பம்

மணல் சிற்பம்

Vinayagar Chathurthi 2022 | ஆகஸ்ட் 31 (நேற்று) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் வெகுவிமரிசையாக விநாயகரின் பிறந்தநாளை கொண்டாடினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Odisha (Orissa), India
விநாயகர் சதுர்த்டி விழாவை மேலும் உற்சாகமாக்கும் வகையில் பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், விநாயகரின் மாபெரும் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். பிரமாண்ட மற்றும் புதுமையான மணல் சிற்பங்களை உருவாக்குவதில் வல்லவரான மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், அருமையான விநாயகர் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் இந்த படைப்பின் ஃபோட்டோவை  அவர் பகிர்ந்துள்ளார். 

ஒடிசாவை சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் விநாயக பெருமானின் பிரமாண்ட மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த வியக்க வைக்கும் அற்புதமான பெரிய மணல் சிற்பத்திற்காக பட்நாயக் சுமார் 3,425 மணல் லட்டுகளையும், பல வகை பூக்களையும் பயன்படுத்தி உள்ளார். பிரமாண்டமான இந்த மணல் சிற்பத்தில் விநாயகப் பெருமானின் இருபுறமும் 2 யானைகள் காட்சியளிக்கின்றன. மேலும் விநாயகரின் தும்பிக்கைக்கு கீழே, சிற்பத்தின் அடிப்பகுதியில் ஹேப்பி கணேஷ் பூஜா (“Happy Ganesh Puja”) என்று எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் மிகவும் பிரமாதமாக உள்ளது.

இந்த அட்டகாசமான மணல் சிற்பம் அடங்கிய ஃபோட்டோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ள சுதர்சன் பட்நாயக், " இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் 3,425 மணல் லட்டுக்கள் மற்றும் சில பூக்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள எனது சாண்ட்ஆர்ட்" என்று கேப்ஷன் கொடுத்து உள்ளார். மேலும் இந்த ஃபோட்டோவில் வங்காள விரிகுடாவின் அமைதியான அழகிய காட்சியின் மத்தியில் அமர்ந்து, சுதர்சன் தனது மணற்கலையில் ஈடுபடுவதை காண முடிகிறது. இரண்டு யானைகளுடன் சுமார் 3,425 மணல் லட்டுகளைப் பயன்படுத்தி சுதர்சன் உருவாக்கி உள்ள விநாயக பெருமானின் மணல் சிற்பம் சுமார் 6 அடி உயரமுள்ளது என்று கூறப்படுகிறது.



நாட்டில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருக்கும் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக, சுதர்சனின் கை வண்ணத்தில் உருவாகி உள்ள இந்த மணல் சிற்பத்தின் புகைப்படத்தை சுதர்சன் ஷேர் செய்து சில நிமிடங்களிலேயே நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி விட்டது. பல நெட்டிசன்கல் சுதர்சன் பட்நாயக்கின் படைப்பு திறமையை பார்த்து வியந்து பாராட்டினர். பலரும் இது ஒரு நம்பமுடியாத அற்புதமான படைப்பு என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

Also Read : விநாயகர் சிலையை கச்சிதமாக உருவாக்கும் சிறுவனை வியந்து பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.! எதிர்ப்பு தெரிவித்துள்ள நெட்டிசன்கள்.!

மற்றொரு யூஸர் சுதர்சனிடம், “அருமை! தாங்களே அனைத்தையும் செய்கிறீர்களா அல்லது உதவிக்கு யாரையாவது வைத்திருக்கிறீர்களா? என்று வியந்து கேள்வி எழுப்பி இருக்கிறார். பிரமிக்க வைக்கும் மணல் கலை. இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்று மற்றொரு யூஸர் கூறினார். இந்த வைரல் போட்டோ தற்போது வரை சுமார் 10,000-க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும், 900-க்கும் மேற்பட்ட முறை ரீட்வீட்டும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Ganesh idols, Trending, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

அடுத்த செய்தி