Vijay Viral Video : 'திடீருனு செவ்வாய், வெள்ளி மட்டும் அசைவத்துக்கு நோ சொன்னாங்க' வைரலாகும் விஜயின் வீடியோ

நடிகர் விஜயின் வீடியோ

நடிகர் விஜயின் பழைய வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

  • Share this:
    நடிகர் விஜயின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 2004ம் ஆண்டு விஜய் தொலைகாட்சிக்கு நடிகர் விஜய் அளித்த இண்டெர்வியூ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. நடிகர் விஜயின் வீடு, மற்றும் காலையில் எழுந்தது முதல் அவர் என்ன செய்வார் என அனைத்தையும் பகிர்ந்திருந்தார்.

    அதில் பேசிய நடிகர் விஜய்,எனக்கு சம் டைம்ஸ் நைட் சூட்டிங் நடக்கும்போது நைட்டு 3 மணி, 4 மணி எல்லாம் வந்து படுப்பேன். நான் வந்து ஆறரை மணிக்கு எந்திரிச்சு பேப்பர பாத்துட்டு தூங்கிடுவேன் அதுல வந்து ஒரு தனி சுவாரஸ்யம் இருக்கு எனக் கூறிய விஜய் அதன் பிறகு தனது மனைவியை அறிமுகம் செய்து வைக்கிறார்.

    பின்னர் பேசிய நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதா குறித்து பேசினார். தனது திரைப்படம் வெளியான பின்னர் திரைப்படம் குறித்து சங்கீதா தான் சரியாக கூறுவார். நிறைய விஷயங்களில் அவர் கூறுவது சரியாக இருந்துள்ளது. என்னோட காஸ்ட்யூம் சங்கீதா தான் பார்த்துக் கொள்வார் என கூறியுள்ளார். இந்த வீடியோ யூடியூபில் மிக அதிக பார்வையாளர்களை பெற்று வைரலாகியுள்ளது.



    மற்றுமொரு வீடியோ ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் பேசிய நடிகர் விஜய் எனக்கு பொதுவாக அசைவம் தான் மிக பிடிக்கும். ஆனால் திடீரென வீட்டில் ஒரு ரூல் போட்டனர் செவ்வாய், வெள்ளி அசைவம் கிடையாது என ஒரு ரூல் போட்டனர்.

    அதனால் அந்த இரண்டு நாள் மட்டும் நான் ஷூட்டிங்கில் சாப்பிட்டு விடுவேன். என நடிகர் விஜய் கூறியதற்கு டுவிட்டரில் விஜயின் ரசிகர்கள் தலைவன் வெற ரகம் என மிக அதிக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர் . Thug Life என இதற்கு பலரும் தெரிவித்துள்ளனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: