எப்பவும் தொகுதியில்தான் ப்ரோ இருப்பேன்: ட்விட்டர்வாசிக்கு பதிலளித்த விஜய் வசந்த்!

எப்பவும் தொகுதியில்தான் ப்ரோ இருப்பேன்: ட்விட்டர்வாசிக்கு பதிலளித்த விஜய் வசந்த்!

விஜய் வசந்த்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  விஜய் வசந்த், ட்விட்டரில் ’அடிக்கடி தொகுதிக்கு வாங்க’ என பதிவிட்டுள்ள நபருக்கு,  இனி எப்போதுமே தொகுதியில்  தான் இருப்பேன் என ரீ-டிவிட் செய்துள்ளார்

 • Share this:
  கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

  தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கப்பட்டது.

  காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த  போட்டியிட்டார்.  கடந்த முறை வசந்தகுமாரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் விஜய் வசந்த்தை  எதிர்த்து மீண்டும் போட்டியிட்டார்.

  மேலும் படிக்க.. அதிமுகவின்  11 அமைச்சர்கள் தோல்வி.. 16 அமைச்சர்கள் வெற்றி

  வாக்கு எண்ணிக்கை முடிவில்  விஜய் வசந்த் 5,67, 250 வாக்குகள் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் 4,32,906 வாக்குகள் பெற்றார். இதையடுத்து,1,34,344 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் வெற்றியை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் விஜய் வசந்துக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில்,  ட்விட்டரில் நபர் ஒருவர் விஜய் வசந்த்தை டேக் செய்து, “அடுத்த எலக்சன்லயும் வின் பண்ணனும் நினைச்சிங்கனா தொகுதி பக்கம் அப்பப்ப தலைய காட்டுங்க ப்ரோ” என்று பதிவிட்டிருந்தார்.

  இதற்கு விஜய் வசந்த்,”அப்பப்ப இல்ல ப்ரோ எப்பவுமே தொகுதி பக்கம் தான் இருக்கப் போறேன். இது அடுத்த எலக்சன்ல வெற்றி பெறுவதற்காக அல்ல. இந்த எலக்சன்ல நீங்க என் மேல் வைத்த நம்பிக்கைக்கு” என பதில் அளித்து ரீ-ட்விட் செய்துள்ளார்.

  விஜய் வசந்த்தின் பதிலுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பலரும் அவரது பதிலை ரீ- ட்விட் செய்து வருகின்றனர்.
  Published by:Murugesh M
  First published: