நியூட்ரினோவுக்கு எதிராக களம் இறங்கிய விஜய் ரசிகர்கள்! இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

பிகில் ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய், ‘சமூகப் பிரச்னைகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யவேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தார்.

நியூட்ரினோவுக்கு எதிராக களம் இறங்கிய விஜய் ரசிகர்கள்! இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்
நியூட்ரினோ
  • News18
  • Last Updated: September 26, 2019, 3:05 PM IST
  • Share this:
தேனியை நியூட்ரினோ திட்டத்தில் பாதுகாக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.


தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. இந்தத் திட்டத்துக்கு சூற்றச் சூழல் ஆர்வலர்கள் மத்தியிலும், கிராம மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு நிலவிவருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை, சூழலியல் சார்ந்து மிக முக்கிய பங்காற்றும் இந்தத் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், மத்திய அமைச்சரவையும் அனுமதியுள்ளது.


ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்


இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பிகில் ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய், ‘சமூகப் பிரச்னைகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யவேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் சுபஸ்ரீ விவகாரத்துக்காக #justiceforsubasree என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். பின்னர், #keezhadiதமிழ்civilization என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இந்தநிலையில், #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் நான்காவது இடத்திலும், தமிழ்நாடு அளவில் முதலிடத்திலும் உள்ளது.Also see:

First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading