ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஜூன் 9 டூ அக்டோபர் 9... சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்த நயன் - விக்கி ஜோடி!

ஜூன் 9 டூ அக்டோபர் 9... சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்த நயன் - விக்கி ஜோடி!

இரட்டை குழந்தைகளுடன் விக்கி - நயன்தாரா

இரட்டை குழந்தைகளுடன் விக்கி - நயன்தாரா

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினருக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் அக்டோபர் 9ஆம் தேதியான இன்று அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. ஜூன் 9 முதல் அக்டோபர் 9 வரை அவர்கள் புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலான நிலையிலே இருந்தன.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கடந்த ஜூன் 9ஆம் தேதி, நீண்ட நாள் காதலர்களாக இருந்து வந்த விக்‌னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி ஈசிஆரில் உள்ள தனியார் விடுதியில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர்.

  அன்று ஆரம்பித்த க்ரேஸ் இன்று வரை நீள்கிறது என சொன்னால் அது மிகையாகது. திருமணத்தன்று நயன்தாரா அணிந்திருந்த சிகப்பு சிற ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சொல்லப்போனால் அன்றில் இருந்து நடைபெற்ற பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் மணப்பெண்கள் அதிகம் உடுத்திய நிறம் சிவப்பு தான்.

  நயன் திருமண புகைப்படங்கள் முழுவதும் ஒரே நாளில் வெளியாகவில்லை. பல்வேறு திரை பிரபலங்கள் நயன் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் ஒவ்வொன்றாக தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். அதில் ஏ.ஆர்.ரகுமான் அவர்களை வாழ்த்திய புகைப்படம் இது.

  மேலும் நயன் திருமண நிகழ்ச்சியை கவுதம் மேனன் இயக்கி அதனை நெட்ஃப்லிக்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. அதனால் மொத்தமாக ஆல்பத்தை வெளியிடாமல், அதில் முக்கிய நிகழ்வுகளை மட்டும் புகைப்படங்களாக பகிர்ந்தார் விக்னேஷ். ஷாருக் கான் நேரில் வந்து வாழ்த்திய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

  அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திருமண தம்பதியினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படம் வெளியானது. இது அப்போது சமூக வலைதளம் முழுவதையும் ஆக்கிரமித்தது.

  இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவனும் நயனும் ஹனிமூனுக்கு வெளிநாடு சென்றனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

  காதலித்து கொண்டிருக்கும் போதே அவர்கள் பதிவிடும் புகைப்படங்கள், அனைவரும் பகிர்ந்து ஸ்டேடஸில் வைப்பது வழக்கம். திருமணமான பின், பார்சிலோனா செல்லும் போது ஃபிலைட்டில் எடுத்த புகைப்படம் வைரலானது. அதில் வேலை பழுவின் பிறகு வெகேஷன் செல்வதாக பதிவிட்டிருந்தார்.

  ஸ்பெயினில் விக்னேஷ் - நயன்தாராவின் கப்புல் கோல்ஸ் புகைப்படம்.

  இது போன்ற புகைப்படங்கள் வெளியிட்டு, இருவரும் ஷோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருந்து வந்தனர்.

  அக்டோபர் 9ஆம் தேதியன்று, தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Celebrities Marriage, Nayanthara, Vignesh Shivan