பிபிசி தொலைக்காட்சி Live-இல் விருந்தினரின் வீட்டில் இருந்த ஆபாச பொம்மை.. அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள்..

விட்டி ஆமோஸ்

விருந்தினராக பங்கேற்ற விட்டி ஆமோஸ், அந்த ஆபாச பொம்மையை தெரிந்து வைத்தாரா? அல்லது தற்செயலாக நிகழ்ந்ததா? என நெட்டிசன்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

  • Share this:
பிபிசி Wales தொலைக்காட்சியின் நேரலை நேர்க்காணலில் விருந்தினரின் பின்புறத்தில் இருந்த செக்ஸ் டாய் பொம்மை பார்வையாளர்களை முகம்சுழிக்க வைத்துள்ளது.உலகின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுள் ஒன்றான பிபிசி வேல்ஸ் தொலைக்காட்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை நேரலை நேர்க்காணல் இடம்பெற்றது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஏற்பட்ட வேலை இழப்பு மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதிப்பதற்காக இந்த நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், விட்டி ஆமோஸ் என்ற பெண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கங்களை கொடுத்தார்.

ஆன்லைன் வழியாக நடைபெற்ற இந்த நேரலை நேர்க்காணலில் பங்கேற்ற விட்டி ஆமோஸின் பின்புறத்தில் புத்தக அலமாரி ஒன்று இருக்கிறது. அதில், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்கு நடுவே ஆணுறுப்பு பாலியல் பொம்மை வைக்கப்பட்டுள்ளது. அந்த பொம்மை நேரலையில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தெரிந்ததால், பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இதுதொடர்பான காட்சிகள் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உலகின் முன்னணி தொலைக்காட்சியாக இருக்கும் பிபிசியில் இடம்பெறும் நிகழ்ச்சியில், இதுபோன்ற ஆபாச பொருட்கள் இருக்குமாறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பலாமா? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னணி பத்திரிக்கையாளரான கிராண்ட் டக்கரும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பிபிசியின் நேர்க்காணலில் இடம்பெற்றுள்ள ஆபாச பொம்மை நிகழ்ச்சியை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து உலகளவில் இது கவனத்தை ஈர்த்துள்ளது. விருந்தினராக பங்கேற்ற விட்டி ஆமோஸ், அந்த ஆபாச பொம்மையை தெரிந்து வைத்தாரா? அல்லது தற்செயலாக நிகழ்ந்ததா? என நெட்டிசன்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

மேலும் சிலர், இதுபோன்ற செக்ஸ் டாய் என்னும் பொம்மைகள் இடம்பெறும் நிகழ்ச்சி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக அவர் இப்படி செய்திருக்கலாம் என்றும், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைபற்றி கவலைப்படாமல் தனக்கு தோன்றியதை விட்டி ஆமோஸ் செய்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் வரை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. விட்டி ஆமோஸ் மட்டுமின்றி பலரும் இதேபோன்ற ஆபாச சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் வர்ணனையாளரும், எழுத்தாளருமான ஜெஃர்பி டூபின் , ஆன்லைன் கான்பரன்ஸ் நடைபெறும்போது தன்னுடைய ஆபாச உறுப்பை காண்பித்துள்ளார். இதனால், New Yorker magazine அவரை பணியிடை நீக்கம் செய்தது. அர்ஜென்டினா பார்லிமென்ட் உறுப்பினர் ஒருவர் இணையவழியில் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் இணையருடன் இருந்தவாறு பங்கேற்றதால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். பிரேசில் அதிபர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் தொழிலதிபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக உடையில்லாமல் தோன்றியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Published by:Arun
First published: