Home /News /trend /

மகனுக்காக தந்தை செய்த தரமான செயல்..3 மாத உழைப்பு.. ரூ.8 லட்சத்தில் உருவான அற்புதம்!

மகனுக்காக தந்தை செய்த தரமான செயல்..3 மாத உழைப்பு.. ரூ.8 லட்சத்தில் உருவான அற்புதம்!

காட்சி படம்

காட்சி படம்

அம்மா குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவாறு, அப்பாவோ தனது பிள்ளை நிலாவிற்கே போய் வர வேண்டும் என்பதற்காக கடினமாக உழைப்பார்.

தனது 3 வயது மகனுக்காக பழைய வேனை மரத்தால் ஆன பீரங்கியாக மாற்றிய வியட்நாம் தந்தை உலக அளவில் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளார்.

அம்மா குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவாறு, அப்பாவோ தனது பிள்ளை நிலாவிற்கே போய் வர வேண்டும் என்பதற்காக கடினமாக உழைப்பார். இதுதான் பெற்றோரின் மனசு. பிள்ளைகள் ஒன்றை வேண்டும் என கேட்டுவிட்டால் பெரும்பாலானோர் பெற்றோர்கள் தட்டாமல் வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். அது எவ்வளவு தான் முடியாத காரியமாக இருந்தாலும் சரி, கைக்கே எட்டாத பொருளாக இருந்தாலும் சரி பணத்தை கொட்டிக்கொடுத்து வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் உண்டு.

அப்படித்தான் வியட்நாமைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகனுக்காக நூற்றுக்கணக்கான மணி நேரங்களையும், ஆயிரக்கணக்கில் பணத்தையும் செலவழித்து ஒரு பழைய வேனை மரத்தாலான பீரங்கியாக மாற்றியுள்ளார். போரால் சிதைந்து போன நாடான வியட்நாமில் தனது மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அசாதாரணமான விளையாட்டு பொருளை உருவாக்கி கொடுத்துள்ளார்.

ட்ரூங் வான் டாவ் என்ற அந்த நபர் தலைநகர் ஹனோய்க்கு கிழக்கே உள்ள பாக் நின் மாகாணத்தில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள பகுதிகளை ஒவ்வொரு வாரமும் தனது மூன்று வயதுடைய மகனுடன் 16 இருக்கைகள் கொண்ட மினி பஸ்ஸை வைத்து செய்யப்பட்ட மரத்தால் ஆன பீரங்கியுடன் சுற்றி வருகிறார்.

இந்த மர பீரங்கி பிரெஞ்சு EBR105 மாதிரியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 2.8 மீட்டர் ஆகும், மாதிரி துப்பாக்கியுடன் பார்க்க அச்சு, அசலாக ஒரிஜினல் பீரங்கி போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

also read : சொந்த முயற்சியில் தனியாக அருங்காட்சியகத்தை அமைத்த காஷ்மீரி பெண்!

இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள டாவ், ‘மகனும் நானும் டேங்கரில் சவாரி செய்வது மிகவும் வேடிக்கையானது. நான் இதை சாதாரண கார் போலவே கருதுகிறேன். மகனுக்கு இதனை மேலும் சுவாரஸ்யமாக்க விரும்பிய டேங்கராக வடிவமைத்தேன். இதற்கும் ஆயுதங்களுடனோ போருடனும் எந்த தொடர்பும் இல்லை” என விளக்கமளித்துள்ளார்.

31 வயது தச்சரான ட்ரூங் வான் டாவ், பயன்படுத்தப்படாத வேனை டேங்கராக மாற்ற இரண்டு ஊழியர்களுடன் சேர்ந்து 3 மாதங்கள் கடினமாக உழைத்துள்ளார். மினி பஸ் தரைத்தளத்தையும், மெயின் இன்ஜினையும் அப்படியே பயன்படுத்தியுள்ளார். உள்புறம் கியர்களுக்கான இடத்திற்கு மட்டும் சற்றே சீரமைத்துள்ளார். தச்சர் என்பதால் அழகிய மரத்தால் ஆன பீரங்கியை வடிவமைத்து, அதற்கு பொருத்தமான நிறங்களையும் அழகாக கொடுத்துள்ளார். இந்த வேலை ஈஸியாக முடிந்தாலும், 8 சக்கரங்கள் கொண்ட டேங்கரை இயல்பாக ஓட வைப்பது கொஞ்சம் சிரமமான வேலையாக தான் இருந்துள்ளது.

also read : தாய் பால் மூலம் நகைகள் தயாரிப்பு... 3 குழந்தைகளுக்கு தாயான லண்டன் பெண்மணியின் புதிய முயற்சி.!

நான்கு ஜோடி சக்கரங்களை எவ்வாறு இயக்குவது என்பது மிகவும் கடினமாக இருந்தது என அவரே தெரிவித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, முழு டேங்கரை வடிவமைப்பதில் கடினமான பகுதியாக இருந்த மர வேலைப்பாடுகள் அல்ல, அனைத்து சக்கரங்களும் ஒரே நேரத்தில் நகர்வதை உறுதி செய்வதாக தான் இருந்துள்ளது. இதனால் மர டேங்கரால் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 25 கிலோமீட்டர் (16 மைல்) வேகத்தை மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

ஏனெனில் அதை விட வேகமாக சென்றால் இணைப்பு கேபிள்கள் சக்கரங்களில் சிக்கிக் கொள்ளும் தொந்தரவு உள்ளது. இதனை உருவாக்குவதற்காக பாசமுள்ள தந்தையான டாவ் தனது 3 மாத உழைப்பையும், 11 ஆயிரம் அமெரிக்க டாலர்களையும் செலவழித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட 8 லட்சம் ரூபாய் வரை செலவழித்துள்ளார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending

அடுத்த செய்தி