• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Viral Video : மூக்கு வழியே பாம்பை விட்டு வாய் வழியே எடுக்கும் முதியவர் - அதிர்ச்சியில் கொதித்தெழுந்த இணையவாசிகள்

Viral Video : மூக்கு வழியே பாம்பை விட்டு வாய் வழியே எடுக்கும் முதியவர் - அதிர்ச்சியில் கொதித்தெழுந்த இணையவாசிகள்

மூக்கு வழியே பாம்பை விட்டு வாய் வழியே எடுக்கும் முதியவர்

மூக்கு வழியே பாம்பை விட்டு வாய் வழியே எடுக்கும் முதியவர்

முதியவர் ஒருவர் தனது மூக்கின் வழியே பாம்பினை விட்டு வாயின் வழியே வெளியே எடுக்கும் செயலுக்கு இணையத்தில் கண்டனம் குவிந்து வருகின்றது.

  • Share this:
    முதியவர் ஒருவர் தனது மூக்கின் வழியே பாம்பினை விட்டு வாயின் வழியே எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    இந்தி நடிகர் வித்யூத் ஜம்வால் (mevidyutjammwal) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் இவர் நடித்துள்ளார் . தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படத்திலும், விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்திலும் இவர் நடித்துள்ளார். விஜய் விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றவர். களரிப்பயிற்று என்ற கலையையும் கற்றவர்.

    இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை தற்போது வரை 2,565,709 பேர் பார்வையிட்டுள்ளனர்.

    அதில் முதியவர் ஒருவர் அளவில் சிறியதாக உள்ள பாம்பினை தனது மூக்கின் உள்ளே விடுகின்றார். முதியவரின் முட்டாள் தனமான செயலால் பாம்பு துடி துடிகின்றது. எதையும் பொருட் படுத்தாமல் தனது வாயின் வழியே பாம்பினை வெளியில் எடுக்கின்றார்.




    இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ் செய்யும் இணையவாசிகள் முதியவர் தவறிழைப்பதாகவும் இது போன்ற செயல் பாம்பினை துன்புறுத்தும் செயல் எனவும் பதிவிட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: