ஜெய்ப்பூரில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு - சில்லிட வைக்கும் வீடியோ

ராஜஸ்தான் மாநிலத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளது

ஜெய்ப்பூரில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு - சில்லிட வைக்கும் வீடியோ
வெட்டுக்கிளிகள்
  • News18
  • Last Updated: May 25, 2020, 3:16 PM IST
  • Share this:
உணவுப் பயிர்களை அழித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் என ஐநா அமைப்பு எச்சரித்திருந்தது.

வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் தற்போது கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் என ஐநா அமைப்பின் உணவு மற்றும் வேளாண் அமைப்பைச் சேர்ந்த வெட்டுக்கிளி தாக்குதல் முன்னறிவிப்பு அதிகாரி கீத் கிரெஸ்மன் கூறியுள்ளார்.

இதற்கேற்ப ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தற்போது வெட்டுக்கிளிகள் பாதிப்பு அதிகமாக உள்ளது.


வயல்கள் மட்டுமின்றி பச்சை மரங்களும் வெட்டுக்கிளிகளால் பெரும் சேதமடைந்துள்ளன, தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் மாவட்ட மக்கள், வெட்டுக்கிளிகளால் வீடுகளிலேயே முடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக பறக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.ஏற்கனவே, கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், தற்போது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு மேலும் விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.


First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading