Home /News /trend /

மேற்கு வங்க மாநிலத்தின் தெருக்களில் சர்வ சாதாரணமாக உலா வந்த கங்காருக்கள்!

மேற்கு வங்க மாநிலத்தின் தெருக்களில் சர்வ சாதாரணமாக உலா வந்த கங்காருக்கள்!

kangaroo

kangaroo

kangaroo roaming on Streets | மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பாய்குரி என்னும் இடத்தில், அண்மையில் இரண்டு கங்காருக்கள் தெருக்களில் சுற்றி வந்தன. அவை இரண்டும் ஆஸ்திரேலியாவை வாழ்விடமாகக் கொண்ட கங்காரு வகைகள் ஆகும். அவை எப்படி இங்கு சுற்றித் திரிகின்றன என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, அந்த கங்காருக்கள் லேசாக காயம் அடைந்திருப்பது குறித்து கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
வனவிலங்குகள் அடிக்கடி காடுகளை விட்டு வெளியேறி ஊருக்குள் ஊடுருவி வருவதை செய்திகளில் அடிக்கடி பார்த்திருப்போம். பெரும்பாலும் உணவு அல்லது தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காகவே விலங்குகள் காடுகளை விட்டு வெளியே வரும். அதிலும் இந்தியாவை பொருத்தவரையில் பெரும்பாலும் யானை, மான், சிறுத்தை போன்ற விலங்குகள் தான் காடுகளில் இருந்து அருகாமையில் உள்ள ஊர்களில் அடிக்கடி ஊடுருவும்.

இதுபோன்ற செய்திகள் அவ்வபோது பெரும் பரபரப்பை கிளப்பினாலும், அதைத் தாண்டி வேறெந்த வியப்புகள் அல்லது அதிர்ச்சிகள் அதில் இருக்காது. ஆனால், மேற்கு வங்க மாநிலத்தின் தெருக்களில் கங்காருக்கள் அடிக்கடி சுற்றித் திரிவதும், அவை பிடிபடுவதும் தான் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்துகின்றன. இந்திய காடுகளில் கங்காருக்கள் கிடையாது. அதே சமயம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கங்காருக்கள், தேர்வு செய்யப்பட்ட ஒரு சில வனச் சரணாலயங்கள் அல்லது வன உயிரியல் பூங்காக்களில் வளர்க்கப்படுகின்றன.

இத்தகைய சூழலில், மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பாய்குரி என்னும் இடத்தில், அண்மையில் இரண்டு கங்காருக்கள் தெருக்களில் சுற்றி வந்தன. அவை இரண்டும் ஆஸ்திரேலியாவை வாழ்விடமாகக் கொண்ட கங்காரு வகைகள் ஆகும். அவை எப்படி இங்கு சுற்றித் திரிகின்றன என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, அந்த கங்காருக்கள் லேசாக காயம் அடைந்திருப்பது குறித்து கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

வனத்துறை கூறுவது என்ன.?

மேற்கு வங்காளத்தில் சுற்றித் திரியும் கங்காருக்கள், கடத்தப்பட்டவையாக இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஐ.எஃப்.எஸ். அதிகாரி பர்வீண் காஸ்வான் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தப் பகுதியில் எந்தவொரு வன உயிரியல் பூங்காவிலும் கங்காருக்கள் கிடையாது. அவை கடத்தி வரப்பட்டவை. இந்த இரண்டு கங்காருக்களும் பிடிக்கப்பட்டுள்ளன. தற்போது வன உயிரியல் பூங்காக்களில் பத்திரமாக உள்ளன. கடந்த மாதத்திலும் கூட கங்காருக்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.



முன்னதாக, ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள கஜோல்தோபா பகுதியில் வைத்து, இந்த இரண்டு கங்காருக்களையும் வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். அவை இரண்டும் மருத்துவ சிகிச்சைக்காக சஃபாரி வன உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து விசாரணை நடத்துவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.

Also Read : மேஜிக் செய்து குரங்கை அசரடித்த இளைஞர் - வீடியோ

இதுகுறித்து பெலகோபா வனச்சரக அதிகாரி எஸ்.தத்தா கூறுகையில், “கங்காருக்குள் எங்கிருந்து வந்தன என்பதை அறிவதற்கான விசாரணையை தொடங்கியுள்ளோம். அவற்றை யார், எங்கிருந்து, எதற்காக கடத்தி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்று கூறினார். முன்னதாக, கங்காருக்கள் தெருக்களில் சுற்றி திரிந்தபோது, பொதுமக்கள் அவற்றை ஆர்வமுடன் வேடிக்கை பார்த்தனர். பலர் தங்களது செல்ஃபோன்களில் படம் பிடித்துக் கொண்டனர்.



முன்னதாக, மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியிலும் இதேபோன்றதொரு நிகழ்வு கடந்த மாதத்தில் நடைபெற்றது. ஹைதராபாதில் உள்ள வன உயிரியியல் பூங்காவில் இருந்து கவுஹாத்தி நகருக்கு கங்காருக்கள் கடத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், அவை ஏன் கடத்தப்படுகின்றன என்பதற்கான காரணம் தெரியவில்லை.
Published by:Selvi M
First published:

Tags: Kangaroo, Trending

அடுத்த செய்தி