Home /News /trend /

Video: வேகமாக வந்த லாரியில் மோத இருந்த சிறுவனை காப்பாற்றிய டிராபிக் போலீஸ்

Video: வேகமாக வந்த லாரியில் மோத இருந்த சிறுவனை காப்பாற்றிய டிராபிக் போலீஸ்

  • Last Updated :
     கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் லாரியில் சிக்க இருந்த மாணவனை தக்க சமயத்தில் டிராபிக் போலீஸ் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்படுகிறது.




     கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே நான்கு முனை சந்திப்பில் நாள்தோறும் வாகனம் அதிகமாக செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.





    இதனை தொடர்ந்து, அங்கு போக்குவரத்து காவலர் ஒருவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.  இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்துக்கொண்டிருந்தது. அப்போது, போக்குவரத்து காவலரையும் மீறி சிறுவன் ஒருவன் தன்னுடைய மிதிவண்டி மூலம் சாலையை கடக்க முற்பட்டான்.

    இதனை கண்ட போக்குவரத்து காவலர் ராஜதீபன், தக்க சமயத்தில் அந்த சிறுவனை தடுத்து நிறுத்தினார். அவர் பிடிக்கவில்லை என்றால் அந்த சிறுவன் லாரியில் மோதி விபத்துக்குள்ளாக நேரிட்டிருக்கும்.

    வீடியோ:






    Watch Also:

    Published by:Yuvaraj V
    First published:

    Tags: Accident, Cuddalore, Trending, Viral Videos

    அடுத்த செய்தி