• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஆறு மாதங்களுக்கு பிறகு பேரன்களை பார்க்க வந்த தாத்தா - நெகிழ்ச்சி வீடியோ!

ஆறு மாதங்களுக்கு பிறகு பேரன்களை பார்க்க வந்த தாத்தா - நெகிழ்ச்சி வீடியோ!

நெகிழ்ச்சி வீடியோ

நெகிழ்ச்சி வீடியோ

ஒரு முதியவர் தனது பேரக்குழந்தைகளை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த ஒரு இனிமையான வீடியோ கிளிப் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • Share this:
தற்போது சமூக வலைத்தளங்களில் எண்ணற்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக ஊரடங்கு காலத்தில் ஏராளமானோர் பெரும்பாலான நேரம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். விலங்குகளின் சேட்டைகள் அடங்கிய வீடியோக்கள், குழந்தைகள் செய்யும் குறும்புகள் உள்ளிட்ட பல்வேறு உணர்ச்சிகள் அடங்கிய வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ஒரு முதியவர் தனது பேரக்குழந்தைகளை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த ஒரு இனிமையான வீடியோ கிளிப் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குட் நியூஸ் நிறுவனத்தின் நிருபர் ஷேர் செய்துள்ள இந்த வீடியோவில், ஒரு வயதானவர் தனது பேரன்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் காட்சிகள் அடங்கியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு உங்கள் கண்களில் தண்ணீர் வரக்கூடும். "கிராண்ட்பா ரீயூனியன்! ஆறு மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக தங்களது தாத்தாவை பார்ப்பதை விட சிறந்த சர்ப்ரைஸ் எதுவும் இல்லை.

 

ரிச்சர்ட் என்பவரின் அப்பா ஜார்ஜியாவிலிருந்து ஃபேர்ஃபீல்டிற்கு அவரது பேரன்களை பார்க்க சென்றுள்ளார். இரண்டு அபிமான பேரன்களான ஜோயி & ட்ரூவை பார்க்கை ஆச்சரியப்படும் வகையில் பள்ளியிலிருந்து வீடு திரும்புவதற்காக காத்திருந்தார். அப்போது பள்ளி வேனில் இருந்து இறங்கும் குழந்தைகள் வாசலில் இருக்கும் தனது தாத்தாவை பார்த்து துள்ளி குதித்து மகிழ்ச்சியடைகின்றனர். மேலும் அந்த தாத்தாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது.



ஆகஸ்ட் 21ம் தேதி ஷேர் செய்யப்பட்ட இந்த வீடியோவை 10,000 க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஆனந்த கண்ணீர் விட்டதாக கமெண்ட் செய்துள்ளனர். சிலர் தங்களது தாத்தா குறித்து கமெண்ட் செய்திருந்தனர், யூசர் ஒருவர் தாத்தா - பாட்டியுடன் குழந்தைகள் வளர்வது ஒரு வரம் என குறிப்பிட்டுள்ளார்.

தாத்தா போன்ற அன்பான நபரை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்ப்பது குழந்தைகளின் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.

Also read... ஆதரவற்ற குட்டி யானைக்கு தாயாக மாறிய காப்பாளர் - பாசத்தை வெளிப்படுத்தும் வைரல் வீடியோ!

முன்னதாக கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று தனது காதலியை தினமும் சந்தித்து முத்தமிட்டு செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. மேலும் அவை நெட்டிசன்களின் இதயங்களை வென்று வருகிறது. பார்னி என்று அழைக்கப்படும் அந்த நாய், தனது சுற்றுப்புறத்திற்கு அருகே உள்ள மற்றொரு பெண் கோல்டன் ரெட்ரீவர் நாயை சந்திக்க செல்வது வழக்கம். பெண் நாயின் பெயர் ரெட் ஆகும். மேலும் நாய்களின் வீடியோவை காணும் போது ரெட்-ஐ பார்னி வெறித்தனமாக காதலித்து வருவது தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: