தெலங்கானாவில் வைரல் ஆகும் தேர்தல் தேங்காய் ஜோதிடம்!

தெலங்கானாவில் வைரல் ஆகும் தேர்தல் தேங்காய் ஜோதிடம்!
  • News18
  • Last Updated: April 23, 2019, 11:48 AM IST
  • Share this:
தெலங்கானாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து தேங்காய் மூலம் சிலர் ஜோதிடம் பார்த்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்தியாவில் பாமர மக்கள், மலைவாழ் மக்கள் ஆகியோர் அதிகம் வசிக்கும் மாநிலம் தெலங்கானா. இம்மாநில மக்களின் குறைந்த கல்வியறிவு, சமய சம்பிரதாயம் ஆகியவற்றுக்கேற்ப பல்வேறு வகையான பழக்க வழக்கங்கள், இறைவழிபாட்டு முறைகள், ஜோதிட முறைகள் ஆகியவை வழக்கத்தில் உள்ளன.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி தெலங்கானாவில் நடைபெற்று வந்தது. அங்கு விரைவில் தேர்தல் நடத்தும் நோக்கில், சந்திரசேகர ராவ் தமது ஆட்சியை கலைக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். இதன்பேரில், ஆட்சி கலைக்கப்பட்டது. எனினும், காபந்து முதல்வராக சந்திரசேகர ராவ் தொடர்ந்து வருகிறார்.


இந்நிலையில், மாநிலம் முழுவதும் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். அந்த வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளனர். இதனால் தெலங்கானா மாநிலத்தில் அரசியல் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

இச்சூழலில் தெலங்கானா மாநில மக்களிடையே அடுத்து மாநிலத்தில் ஆட்சிக்கு வருவது யார்? எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்? மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்? அடுத்த பிரதமர் யார்? என்பன போன்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.

ஆனால் அனைத்திற்கும் மாறாக இன்னும் ஒரு படிமேலே சென்றுள்ள தெலங்கானா மக்கள் அடுத்த தேர்தல் தொடர்பாக ஜோதிடம் பார்க்க துவங்கியுள்ளனர்.இதற்காக அவர்கள், மாநிலத்தில் உள்ள பல்வேறு வகையான ஜோதிடர்களிடம் அடுத்த தேர்தல் பற்றி ஜோதிடம் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் மிக பழமையான ஜோதிட முறையான தேங்காய் மூலம் ஜோதிடம் பார்க்கும் நபர் ஒருவரிடம் சிலர் அடுத்த தேர்தல் பற்றி விவாதிப்பது தொடர்பான வீடியோ வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும், ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்பது உறுதி என்றால் எழுந்து நில் என்று தன்னுடைய உள்ளங்கையில் இருக்கும் தேங்காயை பார்த்து அந்த ஜோதிடர் கூறுகிறார். உடனே ஜோதிடரின் உள்ளங்கையில் இருக்கும் தேங்காய் சிறிது சிறிதாக எழுந்து நிற்கிறது. சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தோல்வியடையும் என்றால் படுத்துக்கொள் என்று தேங்காயை பார்த்து ஜோதிடர் கூறுகிறார். உடனடியாக தேங்காய் சிறிது சிறிதாக சாய்கிறது. இதேபோல் ஜோதிடர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் தேங்காய் எழுந்து நின்றும், படுத்துக் கொண்டும் பதில் கூறுகிறது.

தேங்காய் மூலம் அடுத்த தேர்தல் பற்றி ஜோதிடர் கூறிய தகவல்கள் பலிக்குமா? என்பது தேர்தல் நடந்து முடிவுகள் வெளியான பின்னரே உறுதியாக தெரியவரும்.

First published: October 4, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading