Home /News /trend /

காரை மறித்து அழகாக வட்டமிட்ட வாத்துக்கூட்டம் - டிராபிக்கில் சிக்கியவர்களைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ!

காரை மறித்து அழகாக வட்டமிட்ட வாத்துக்கூட்டம் - டிராபிக்கில் சிக்கியவர்களைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ!

காரை மறித்த வாத்துக்கூட்டம்

காரை மறித்த வாத்துக்கூட்டம்

Ducks-go-around video : வாத்துகள் அழகாக காரை வட்டமிட்டு மெதுவாக செல்வது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ரெட்டிட் பக்கத்தில் பதிவிடப்பட்ட வாத்துகள் சாலையில் வாகனங்களைச் சூழ்ந்துகொண்டு ஒய்யாரமாய் நடந்து போகும் காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    உலகின் எந்தப்பகுதியில் என்ன நடந்தாலும் வீடியோ மற்றும் புகைப்படங்களாக நம் கண் முன்னே கொண்டு சேர்ப்பது சோசியல் மீடியாக்கள் தான். டிவிட்டர், வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் என பலவற்றின் மூலம் உலகில் நடக்கும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த வரிசையில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற ஒரு சமூக வலைத்தளமாக ரெட்டிட் ( Reddit) பதிவிடப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது. இதோடு கேளிக்கையான கமெண்ட்களும் இடம் பெற்றுள்ளது. அப்படி என்ன தான்? அந்த வீடியோவில் இருந்தது என்று பார்க்கலாம். ரெட்டிட்டில் ”flyingcatwithhorns” என்ற பக்கத்தில் சுமார் 15 வினாடிகளுடன் கூடிய வீடியோ பகிரப்பட்டுள்ளது.

    Also Read : ”இது ஆப்பிளா.? இல்லை கேக்கா.? - வீடியோ முடிவதற்குள் கண்டுபிடியுங்கள்.!

    அந்த வீடியோவில், சாலையில் சென்று கொண்டிருந்த  காரைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட வாத்து கூட்டங்கள் வட்டமிடுகிறது. இதனால் கார் வேறு எங்கும் செல்ல முடியாமல் அப்படியே நிற்கின்றது. சுமார் 15 வினாடிகள் தான் என்றாலும் அழகாகவும், மகிழ்ச்சியாகவும் வாத்து நடைப்போட்டு செல்வது அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது. பொதுவாக வாத்துக்கள் மெல்ல நடக்கும் என்பதால் சாலைகளில் வந்த கார்கள் அங்காங்கே அப்படியே நின்று விடுகிறது. இதனால் பணிக்குச் செல்வது முதல் பள்ளி செல்வோர் அனைவருக்கும் காலதாமதம் ஆகிறது.



    இது வாத்துக்கு எதுவும் தெரியவா போகிறது? அழகாகக் காரை வட்டமிட்டுச் செல்வது நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை இந்த வீடியோவை 65,000-க்கும் அதிகமாகப் பார்வையாளர்கள் பார்த்ததோடு லைக்குகளையும் பதிவிட்டுள்ளனர். இதோடு மட்டுமின்றி இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல நகைச்சுவையான மற்றும் கலாய்க்கும் படியான கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
    Published by:Janvi
    First published:

    Tags: Comedy Videos, Trending Video, Viral Video

    அடுத்த செய்தி