#Trending | ”கொஞ்சம் அன்பு வேண்டும்” - சுஷாந்த் சிங் ஆன்மாவுடன் பேசியதாக வீடியோக்களை வெளியிட்ட அமானுஷ்ய நிபுணர் ஸ்டீவ் (வீடியோ)

கடந்த ஜூன் 14-ஆம் தேதி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்கும் வகையில்,  Paranormal expert என அழைக்கப்படும் அமானுஷ்ய நிபுணர் ஸ்டீவ் ஹஃப் சுஷாந்த் சிங் ஆன்மாவுடன் பேசும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி, Spirit box வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

#Trending | ”கொஞ்சம் அன்பு வேண்டும்” - சுஷாந்த் சிங் ஆன்மாவுடன் பேசியதாக வீடியோக்களை வெளியிட்ட அமானுஷ்ய நிபுணர் ஸ்டீவ் (வீடியோ)
சுஷாந்த் சிங் ராஜ்புத்
  • Share this:
கடந்த ஜூன் 14-ஆம் தேதி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்கும் வகையில்,  Paranormal expert என அழைக்கப்படும் அமானுஷ்ய நிபுணர் ஸ்டீவ் ஹஃப் சுஷாந்த் சிங் ஆன்மாவுடன் பேசும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி, Spirit box வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.



அந்த வீடியோவில், “இன்று நான் சுஷாந்த்தின் ஆன்மாவுடன் இணைப்பு ஏற்படுத்த முயற்சிக்கிறேன். பேசுமாறு கேட்டுக்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” எனத் தொடங்குகிறார்.




 

ஸ்டீவ், “உங்கள் ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் எதையாவது சொல்ல விரும்புகிறீர்களா?” எனக் கேட்கிறார். “ஒளியில் இருக்கிறீர்களா”? எனக் கேட்கிறார். “ஒளியில் இருக்கிறேன்” என்கிறது அக்குரல்.இரண்டாவது வீடியோவில், “உங்களை யாரும் கொலை செய்தார்களா” எனக் கேட்கிறார், இறப்பதற்கு முந்தைய இரவு என்ன செய்தீர்கள் எனக் கேட்கிறார். “பெரிய மனிதர்களுடன் சண்டை” என்கிறது அக்குரல். உரையாடலை முடிப்பதற்கு முன்னதாக எதையாவது கூற விரும்புகிறீர்களா என்கிறார் ஸ்டீவ். “கொஞ்சம் அன்பு வேண்டும்” என்கிறது அக்குரல்.

ஆன்மாவுடன் பேசும் இந்த ஸ்பிரிட் பாக்ஸ் முறை மீது பலருக்கும் பல மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், சுஷாந்த்தின் ரசிகர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து நெகிழ்ச்சியும், நினைவுகூர்ந்தும் எழுதி வருகிறார்கள்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading