Home » News » Trend

டிக்டாக்கில் ஆந்தையுடன் வீடியோ... மாட்டிக்கொண்ட பிரபலம்!

டிக்டாக்கில் ஆந்தையுடன் வீடியோ... மாட்டிக்கொண்ட பிரபலம்!
டிக்டாக்கில் கூகை ஆந்தை
  • Share this:
டிக்டாக்கில் பிரபலமான கீர்த்தி படேல் என்பவர், ஆந்தையுடன் வீடியோ வெளியிட்டது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகரை சேர்ந்தவர் கீர்த்தி படேல். இவர் டிக்டாக்கில் மிக பிரபலமானவர். இவர் வெளியிடும் வீடியோக்கள் அதிக லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை பெறும். அதற்காகவே வீடியோக்களை வித்தியாசமான முறையில் வெளியிட எண்ணி ஆந்தை ஒன்றை கையில் பிடித்த படி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார் கீர்த்தி படேல்.

இதனிடையே அதுவே தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்த வீடியோ தற்போது வனத்துறை அதிகாரிகளின் கவனம் சென்றுள்ளது. ஆந்தைகள் இரவு நேரங்களில் மட்டும் வெளியே உலவும். மரப்பொந்துகள், மலையையொட்டியுள்ள காடுகளில் வாழும் குணமுடையது.


அவை அழிக்கப்படும் போது, குடியிருப்புகளில் உள்ள மரங்களில் தஞ்சம் அடைகின்றன. அவையும் வெட்டப்படும் போது, தங்க இடம் கிடைக்காமல் வீடுகளை நோக்கி, ஆந்தைகள் வரத் துவங்கிவிடும். சிறிய வகை பாம்புகள், எலிகள், பூச்சிகள், ஓணான்களை தின்று வாழும் இயல்புடையது.

இதனிடையே கீர்த்தி படேல் கூகை ஆந்தையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். கூகை ஆந்தை அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்று. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள இவ்வகை ஆந்தையை அவர் வைத்திருந்தது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.

Also see...சோப்பு போட்டு குளித்தவாறே டூவீலரில் பயணம்... ஆப்பு வைத்த போலீஸ்..!ஆத்தி... இது சிங்கப்பெண்ணாச்சே...இரு கைகளால் சிலம்பம் சுற்றும் தமிழச்சி!
First published: January 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading