Home /News /trend /

ஓட ஓட துரத்திய உலகின் மிகக் கொடிய பறவை.. உயிர் தப்பிய திக் திக் வீடியோ!

ஓட ஓட துரத்திய உலகின் மிகக் கொடிய பறவை.. உயிர் தப்பிய திக் திக் வீடியோ!

கசோவரி

கசோவரி

Cassowary: The most dangerous bird in the world : உலகின் மிக ஆபத்தான பறவை ஒன்று உள்ளது. அதன் பெயர் கசோவரி (Cassowary).இந்த பறவை அதன் அளவு மற்றும் வலிமை காரணமாக மிகவும் ஆபத்தானது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  ஆஸ்திரேலியாவின் நார்த் குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஃபாரஸ்ட் ரேஞ்சர்ஸ் குழுவினருக்கும்,  கசோவரி (Cassowary) என்று அழைக்கப்படும் உலகின் மிகப் பெரிய பறவைக்கும் இடையே நடந்த அபாயகரமான சந்திப்பில், ரேஞ்சர் குழுவினர் உயிர் தப்பியுள்ள சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் நெட்டிசன்களை திகிலடையச் செய்துள்ளது.

  ஆபத்தான கொடிய காட்டு விலங்குகள் என்றால் பெரும்பாலும் நம் நினைவிற்குச் சிங்கங்கள், புலிகள் மற்றும் கரடிகள் போன்ற வேட்டையாடும் மிருகங்கள் தான் வரும். ஆனால் பறவைகள் என்று வரும் போது பெரிதாக ஆபத்தை விளைவிக்கும் எதுவும் இருக்காது என்று தான் நாம் நினைப்போம்.

  எனினும் பறவை இனத்திலும் உலகின் மிக ஆபத்தான பறவை ஒன்று உள்ளது. அதன் பெயர் கசோவரி (Cassowary). இந்த பறவை அதன் அளவு மற்றும் வலிமை காரணமாக மிகவும் ஆபத்தானது. இது நியூகினியா மற்றும் வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டல காடுகளுக்குச் சொந்தமான ஒரு பெரிய பறவையாகும்.

  கசோவரிக்கு அதன் கூர்மையான நகங்களை வைத்து நமது தோலில் ஊடுருவி மனிதர்களைக் கொல்லும் திறன் உள்ளது. தவிர இதன் வலுவான பெரிய கால்களால் வைக்கும் பஞ்ச், குடலை குழைக்கக் கூடிய பாக்சிங் பஞ்ச் போல் இருக்கும். மேலும் இவை மனிதர்களைக் கொன்றுள்ள சம்பவங்களும் பதிவாகி உள்ளது என்பது தான் அதிர்ச்சிதரக் கூடிய தகவல்.

  Also Read : இது கதவா ? காரா?.. ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்த வைரல் வீடியோ.!

  ஆஸ்திரேலியாவில் அந்த பறவையை எதிர்கொண்டு   உயிர் தப்பிய சம்பவம் தொடர்பான வீடியோவை கேமரூன் வில்சன் என்ற ரேஞ்சர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

  வில்சன் குயின்ஸ்லாந்தில் சீனியர் பாதுகாவலராக உள்ளார். சமீபத்தில் அவர் தனது குழுவுடன் குயின்ஸ்லாந்தின் வடக்கு கேப் யார்க் தீபகற்பத்தில் குவாட் பைக்கில் ரோந்து சென்றார். அவர் தனது குவாட் பைக்கில் சென்ற போது திடீரென ஒரு கசோவரி பறவை தன்னையும், தன் குழுவினரையும் பின்னால் துரத்துவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வில்சன் தனது பைக்கை வேகமாக ஓட்டத் தொடங்கியதுடன் குழுவினரையும் உஷார் படுத்தினார்.

  கசோவரி பறவை ரேஞ்சர்ஸ் குழுவினரை துரத்தும் காட்சி


  இறுதியில் கசோவரியை விட கூடுதல் வேகத்தில் தங்களது பைக்கை ஒட்டி வில்சன் மற்றும் குழுவினர் அபாயத்திலிருந்து நுணியளவில் தப்பிப் பிழைத்துள்ளனர். அந்த மோசமான அனுபவத்தை பற்றிக் குறிப்பிட்டுள்ள வில்சன், அந்த பறவையிடம் சிக்கியிருந்தால் தனது குழுவின் பல உறுப்பினர்கள் கடும் காயமடைந்திருப்பார்கள் என்று கூறினார். பொதுவாக தனக்கோ தனது குட்டிகளுக்கோ ஆபத்து என்ற சூழல் வரும் போது தான், கசோவரி தாக்க முனையும். ஆனால் நாங்கள் அவை இருக்கும் பகுதிக்குள் ரோந்து சென்ற போது வழக்கமாக ஓடுவதைப் போல ஓடுவதற்கு மாறாக எங்களது குவாட் பைக்கைத் துரத்தியது எங்களுக்கு உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் வில்சன் குறிப்பிட்டு உள்ளார்.

  இதே போன்று, புளோரிடாவில் வசிக்கும் 75 வயதான 2019-ல் அன்று கசோவரியால் தாக்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

   
  Published by:Janvi
  First published:

  Tags: Australia, Birds, Viral Video

  அடுத்த செய்தி