முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / WATCH - சூரியனில் இருந்து வெடித்துக் கிளம்பியதா சூறாவளி..? வைரல் வீடியோ!

WATCH - சூரியனில் இருந்து வெடித்துக் கிளம்பியதா சூறாவளி..? வைரல் வீடியோ!

சூரியனின் இருந்து கிளம்பிய அலைகள்

சூரியனின் இருந்து கிளம்பிய அலைகள்

Sun Polar Vortex : சூரியனில் இருந்து வெடித்துக் கிளம்பிய அலைகளின் துல்லியமான வீடியோ என காணொளி ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூரியனில் மேல் பரப்பு வெடித்து அலைகள் சூறாவளி புயல் போல் காட்சியளிக்கும் துல்லியமான வீடியோ  என தற்போது சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. 'சூரியன் உடைந்தது’ என்ற வார்த்தைகள் கொண்டு ஆராய்ச்சியாளர் டமிதா ஸ்கோவ் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நாசாவின் James Webb telescope மூலம் இந்த காட்சிப் பதிவாகப்பட்டுள்ளது என முதலில் தகவல் வந்தது. அந்த வீடியோவில் சூரியனின் முழு வட்டமான உருவம் தெரிகிறது. அதில் சூரியனின் மேல் பரப்பில் சூறாவளி போல் சூரிய அலைகள் மேலே கிளம்புகிறது. அது தத்துருவமாகப் பார்க்க சூரியன் வெடித்துக் கிளம்பும் அலைகள் போல் காட்சியளித்தது.

சூரியக் குடும்பத்தின் மூல ஆற்றலே சூரியன் என்ற நிலையில் சூரியனில் இருந்து கிளம்பிய சூரிய புயல் அலைகளினால் விஞ்ஞானிகள் குழப்பம் அடைந்ததாகவும் தகவல்கள் பரவின. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

திடீரென சூரியனில் புயல் அலைகள் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. இதுவரை இதன் உண்மைத்தன்மை குறித்த எந்த தகவல்களையும், நாசாவும், அதன் ஆராய்ச்சியாளர்களும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Sun, Twitter, Viral Video