Home /News /trend /

மணக்கோலத்தில் புல்லட்டை ஓட்டியபடி திருமண மண்டபத்துக்குச் சென்ற மணப்பெண் - இன்ஸ்டாகிராமில் வீடியோ வைரல்!

மணக்கோலத்தில் புல்லட்டை ஓட்டியபடி திருமண மண்டபத்துக்குச் சென்ற மணப்பெண் - இன்ஸ்டாகிராமில் வீடியோ வைரல்!

புல்லட்டில் செல்லும் மணப்பெண்.

புல்லட்டில் செல்லும் மணப்பெண்.

"வைஷாலி சௌத்ரி குடெய்ல்" என்பவர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    திருமண நாளன்று வினோதமாகத் திருமண மண்டபத்திற்கு புல்லட் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த மணப்பெண்ணின் காணொளி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    திருமண நாள் என்பது எல்லோரின் வாழ்வில் ஒரு முக்கிய நாளாக இருக்கிறது. இந்த ஒரு நாளுக்காகப் பல மாதங்களாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவர். அதே போன்று அந்த நாளில் தான் மிகச் சிறப்பானவராகத் தோற்றம் தர வேண்டும் என்றும் நினைப்பர். பல வித்தியாசமான திருமண நிகழ்வைப் பற்றி நாம் கேட்டுள்ளோம். அதில் தற்போது இணைவதாக இந்த காணொளிப் பதிவு உள்ளது.

    திருமண நாளன்று வினோதமான விஷயத்தை மணப்பெண் ஒருவர் செய்துள்ளார். இது நெட்டிசன்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பொதுவாகத் திருமண நாளில் எடுக்கக் கூடிய போட்டோகிராபி அனைத்துமே சமீப காலமாக அற்புதமாக உள்ளது.

    இந்த காணொளியும் ஒரு அழகியத் திருமண நிகழ்வாக வளம் வருகிறது. காணொளியில் மணப்பெண் ஒருவர் புல்லட் வண்டியை ஓட்டிக் கொண்டே திருமண மண்டபத்திற்கு வந்துள்ளார். இந்த வீடியோவை அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    Also Read : ஆர்டர் செய்த வெஜ் பிரைடு ரைசில் சிக்கன் துண்டுகள் - தமிழ் பாடலாசிரியருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

    இந்த வைரலான வீடியோவில், கல்யாண உடையில் ஜாலியாக ராயல் என்ஃபீல்டு புல்லட்டை ஓட்டியபடி மண்டபத்திற்குச் செல்கிறார். மேலும் அந்த பெண் கிரிம்சன் ராயல் என்ஃபீல்டு புல்லட்டை ஓட்டி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




    "வைஷாலி சௌத்ரி குடெய்ல்" என்பவர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பதிவிட்ட நான்கு மணி நேரத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் இந்த வீடியோவிற்கு பலரும் பல விதமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இதை இணையத்தில் பார்த்து நெட்டிசன்கள் பாராட்டியும், விமர்சித்தும் வருகின்றனர். இந்த வீடியோவை 1500-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
    Published by:Janvi
    First published:

    Tags: Bike Riders, Two Wheeler, Viral Videos, Wedding Season

    அடுத்த செய்தி