Home /News /trend /

தண்ணீருக்குள் ஹை ஹீல்ஸ் கேட்வாக்.. அசத்தும் நீச்சல் வீராங்கனை - வைரலாகும் வீடியோ!

தண்ணீருக்குள் ஹை ஹீல்ஸ் கேட்வாக்.. அசத்தும் நீச்சல் வீராங்கனை - வைரலாகும் வீடியோ!

கிறிஸ்டினா மகுஷென்கோ

கிறிஸ்டினா மகுஷென்கோ

தரையில் நடப்பது போல் தண்ணிக்குள் ஹை ஹீல்ஸ் போட்டுகொண்டு கேட்வாக் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    நீச்சல் வீராங்கனை கிறிஸ்டினா மகுஷென்கோ நீச்சல் குளத்தில் செய்யும் சாகசங்களைப் பார்த்தால் யாராலும் பார்ப்பதை நிறுத்த முடியாது. அந்த அளவிற்கு அவரின் செயல்கள் வியப்பில் ஆழ்த்துகிறது. தரையில் நடப்பது போல் தண்ணீர்க்குள் ஹை ஹீல்ஸ் போட்டுக்கொண்டு கேட்வாக் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

    அந்த வீடியோவில் அவர் பிராடா பிராண்ட் பையுடன் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தின் அடியின் கேட்வாக் செய்கிறார். மேலும் அப்படியே பல்டி அடித்து தலைகீழாகக் கால்கள் மிதக்கும் தண்ணீரில் பட, தலை தரையில் பட மூச்சுப் பிடித்து தண்ணீரின் அடியில் மீண்டும் கேட்வாக் செய்கிறார்.

    இந்த வீடியோவை அவர் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட சில மணி நேரத்திலேயே பலரின் கண்களைப் பிடித்து வைத்துவிட்டது அந்த காட்சி. வர்ணிக்க முடியாத அளவிற்கு அதில் அவ்வளவு நிதானமும் அசாதாரணமான செயல்களும் உள்ளது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களையும் அவரின் இந்த அசாதாரண திறமைகளையும் பாராட்டி வருகின்றனர்.



    மேலும் இதே போன்று மைக்கேல் ஜாக்சன் பிறந்த நாள் அன்று இது மாதிரியான இன்னொரு வியப்பான செயலையும் செய்துள்ளார். மைக்கேல் ஜாக்சன் நிலவு நடை அதாவது மூன்வாக் பற்றி உலகத்திற்கே தெரியும். அதனை இவர் தண்ணீர்க்குள் செய்து காட்டியுள்ளார். இவர் செய்த மைக்கேல் ஜாக்சனின் மூன்வாக் மேலும் ஆச்சிரியத்தில் ஆழ்த்துகிறது.

    Also Read : இந்தியாவின் கன்டென்ட் தலைநகரம் எது தெரியுமா? சத்தீஸ்கரின் கிராமத்தில் மூன்றில் ஒருவர் யூடியூபராம் !

    சாதாரணமாக ஒருவர் தரையில் கூடச் செய்ய முடியாததை இவர் தண்ணீர்க்குள் செய்யும் காட்சி பாராட்டத்தக்கது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Janvi
    First published:

    Tags: Trending Video, Viral Videos

    அடுத்த செய்தி