Home /News /trend /

இறுதியாக வாழைப்பழத்தை நசுக்காமல் தோலை உரிக்க கூடிய ரோபோவை உருவாக்கிய ஜப்பான் ஆய்வாளர்கள்!

இறுதியாக வாழைப்பழத்தை நசுக்காமல் தோலை உரிக்க கூடிய ரோபோவை உருவாக்கிய ஜப்பான் ஆய்வாளர்கள்!

Robot

Robot

Robot | வாழைப்பழத்தை உரிக்க நமக்கெல்லாம் எவ்வளவு வினாடிகள் ஆகும்.!! ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சில நிமிடங்களில் வாழைப்பழத்தை உரிக்க கூடிய ரோபோவை சமீபத்தில் உருவாக்கி உள்ளனர்.

ஜப்பானில் உள்ள ரோபோக்கள் தொழிற்சாலைத் தளங்களில் எளிமையான பணிகளை செய்கின்றன, ஹோல்டல்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே பழத்தை நசுக்காமல் தோலை மட்டுமே உரித்து வாழைப்பழத்தை சேதமடையாமல் பிரித்து எடுக்கும் நுட்பமான பணியை செய்யும் திறன் கொண்ட ரோபோவை தான் ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெளி உலகிற்கு அறிமுகம் செய்து உள்ளனர்.

இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோ மற்றும் அறிக்கைகளின் படி பார்க்கும் போது குறிப்பிட்ட ரோபோவுக்கு 2 ஆர்ம்ஸ் மற்றும் 2 கைகள் உள்ளன. ஆர்ம்ஸ் மற்றும் கைகள் இரண்டும் பொருட்களைப் பிடிக்க கூடிய ஒரு கிரிப்பராக செயல்படுகின்றன. இந்த ரோபோவின் வெற்றி சதவீதம் 57 என்றாலும் கூட, உலோக பாகங்களை நகர்த்துவது அல்லது காபி வழங்குவதை விட மிகவும் நுட்பமான செயல்பாடுகளை இயந்திரங்கள் மேற்கொள்ளும் நாள் தொலைவில் இல்லை என்பதை வாழைப்பழத்தை உரிக்கும் இந்த ரோபோ வெளிப்படுத்துகிறது.

டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்ட ரோபோ 3 நிமிடங்களில் இரண்டு கைகளை பயன்படுத்தி வாழைப்பழத்தை நேர்த்தியாக உரிப்பதை காண முடிகிறது. இதற்காக ஆராய்ச்சியாளர்கள் அந்த ரோபோவுக்கு "டீப் இமிட்டேஷன் லேர்னிங்" ப்ராசஸை பயன்படுத்தி பயிற்சி அளித்தனர். சுமார் 13 மணி நேரங்களுக்கும் மேலான பயிற்சியின் விளைவாக இந்த ரோபோ வெற்றி வீதத்தை எட்டியதாக ஆய்வாளர்கள் கூறினர்.

வீடியோவில் ரோபோ வாழைப்பழத்தைப் ஒரு கையால் மேசையிலிருந்து தூக்கி, மறு கையால் வாழைப்பழத்தின் நுனியைப் பிடித்து, வாழைப்பழத்தை தேவைக்கேற்ப நகர்த்தி நகர்த்தி உரிப்பதை காணலாம். 13 மணிநேர பயிற்சிக்குப் பிறகு, ரோபோவால் 3 நிமிடங்களுக்குள் வாழைப்பழத்தை முழுவதுமாக உரிக்க முடிந்துள்ள அதே நேரம், நிச்சயமாக இந்த தொழில்நுட்பம் வாழைப்பழங்களை உரிக்க பயன்படுத்தப்படாது என்று நம் அனைவருக்குமே புரிந்திருக்கும்.



பின் எதற்காக என்று தானே யோசிக்கிறீர்கள்.! பொதுவாக சிறந்த மோட்டார் திறன்கள் தேவைப்படும் பணிகளை கையாள ஒரு சிஸ்டமை பயிற்றுவிப்பதே இந்த சோதனையின் குறிக்கோள். இன்னும் கூடுதலான சோதனைகளை மேற்கொள்ளும் போது ரோபோ பயிற்சி முறையானது பல எளிய "மனித" பணிகளை செய்வது குறித்து ரோபோக்களுக்குக் கற்பிக்க முடியும் என்று நம்புவதாக ஆய்வாளர் குனியோஷி கூறி இருக்கிறார்.

Also Read : பெண் கர்ப்பம்... ஏலியன் காரணமா? பெண்டகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சிறந்த பயிற்சி பெற்ற ரோபோக்களால் ஜப்பானின் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைகளை போக்க முடியும். பெண்டோ லஞ்ச் பாக்ஸ் அல்லது மனித உழைப்பை அதிகம் சார்ந்துள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் சிறந்த பயிற்சி பெற்ற ரோபோக்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் குனியோஷி.
Published by:Selvi M
First published:

Tags: Japan, Trending, Viral Video

அடுத்த செய்தி