ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அம்மா என் சாக்லேட்ட திருடுறாங்க.. கேட்டா அடிக்கிறாங்க - கியூட்டாக போலீசில் புகார் கொடுத்த 3 வயது சிறுவன்

அம்மா என் சாக்லேட்ட திருடுறாங்க.. கேட்டா அடிக்கிறாங்க - கியூட்டாக போலீசில் புகார் கொடுத்த 3 வயது சிறுவன்

தாய் மீது புகார் தரும் குழந்தை

தாய் மீது புகார் தரும் குழந்தை

தனது அம்மா தன்னை அறைந்து விட்டதாக புகார் கொடுத்துள்ளான். அதோடு தனது மிட்டாய்களை  திருடியதாக கூறியுள்ளான். விளையாட்டாக அவன் சொல்வதையும் சரி என்று கேட்டுக்கொண்டு சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா நாயக் ஒரு பேனா ,  காகிதம் எடுத்து புகாரை பதிவு செய்யத் தொடங்கினார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Madhya Pradesh |

  மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூரைச் சேர்ந்த ஒரு பெண் காவலர், ஒரு குழந்தையின் தாயார் தனது மிட்டாய்கள் மற்றும் சாக்லேட்டுகளைத் திருடியதாக குற்றம் சாட்டி கொடுத்த புகாரை எழுதும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

  மூன்று வயது குழந்தை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காக்னார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தெத்தலை காவல் நிலையத்திற்கு தனது தந்தையுடன் சென்றுள்ளார்.  குளித்ததற்கு பிறகு தனது தாய் தனக்கு மை வைத்து விட்டதால் தகராறு நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அவனது தந்தை சமாதானம் செய்ய முயற்சித்தும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தே ஆக வேண்டும் என்று ஆடம் பிடித்துள்ளான். அதனால் சிறுவனை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

  நடுவானில் குடிபோதை.. கேபின் உதவியாளரின் விரலைக் கடித்த பயணி... பாதி வழியில் தரை இறங்கிய விமானம்!

  அங்கே அவன், தனது அம்மா தன்னை அறைந்து விட்டதாக புகார் கொடுத்துள்ளான்.  அதோடு தனது மிட்டாய்களை  திருடியதாக கூறியுள்ளான். விளையாட்டாக அவன் சொல்வதையும் சரி என்று கேட்டுக்கொண்டு சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா நாயக் ஒரு பேனா ,  காகிதம் எடுத்து புகாரை பதிவு செய்யத் தொடங்கினார்.

  சிறுவன் மிட்டாய்களை திருடியதால் அம்மா அடித்தார்களா என்று கேட்டதற்கு. இல்லை! என் அம்மா தான் என்னுடைய மிட்டாய்களை திருடினார். குளித்துவிட்டு வந்ததும், வேண்டாம் என்று சொல்லியும் மை வைத்துவிட்டார் என்று அழுத்தி கூறி கியூட்டாக புகார் கொடுத்துள்ளார்.

  அவனது அம்மாவின் பெயர் புகாரில் போடப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட சிறுவனிடம் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா நாயக் புகாரில் கையொப்பமிடச் சொன்னபோது, ​​குழந்தை காகிதத்தில் பேனாவைக் கொண்டு சில கோடுகளை போட்டுள்ளான்.

  “நாங்கள் பள்ளிகளில் விழிப்புணர்வு இயக்கங்களைச் செய்வதால் குழந்தைகளுடன் பழகினேன். காவல் நிலையத்திற்கு அருகில் ஒரு பள்ளியும் உள்ளது, குழந்தைகள் அடிக்கடி எங்களுடன் பழக வருகிறார்கள். குழந்தைகள் இணக்கமாகவும் வெளிப்படையாகவும் காவல்துறையுடன் இருப்பது நல்லது என்று நான் உணர்கிறேன். அவர்கள் எப்போதும் தங்கள் உண்மையான புகார்களுடன் எங்களிடம் வரலாம், ”என்று நாயக் கூறினார்.

  இதையடுத்து , மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாய்கிழமை சிறுவனுக்கு வீடியோ அழைப்பில் என்ன வேண்டும் என்று கேட்டு, வரும் தீபாவளி பண்டிகையில் அவருக்கு சாக்லேட் மற்றும் சைக்கிள் அனுப்புவதாக உறுதியளித்துள்ளார்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Child, Madya Pradesh, Viral Video