முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Viral video | நாவில் எச்சில் ஊறவைக்கும் பூனை தோசை.. இணையத்தை கலக்கும் வீடியோ..!

Viral video | நாவில் எச்சில் ஊறவைக்கும் பூனை தோசை.. இணையத்தை கலக்கும் வீடியோ..!

பூனை தோசை

பூனை தோசை

தெரு உணவுகளை விரும்புபவர்கள், உணவின் சுவை மட்டுமல்ல, அதை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதை கவனிப்பதிலும் ஆர்வமாக உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • chennai |

தெரு உணவுகளை விரும்புபவர்கள், உணவின் சுவை மட்டுமல்ல, அதை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதை கவனிப்பதிலும் ஆர்வமாக உள்ளனர். இப்போது உணவு தயாரிக்கும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது. இதற்காகவே உணவு விடுதிகளும் வித்தியாசமான உணவுகளைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டது.

அந்த வழியில் நந்தி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் குமார் ட்விட்டரில் இரு வித்தியாசமான தோசை சுடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த இரண்டு நிமிட கிளிப்பில், தெரு உணவு விற்பனையாளர் ஒருவர் தோசை மாவை வட்ட வடிவில் கல்லின் மீது பரப்புகிறார். முதலில் சாதாரண தோசை போல ஆரம்பிக்கிறது.

பின்னர் தோசை அருகிலேயே இன்னொரு வட்டத்தை உருவாக்குகிறார். அதன் பின்னர் தான் அவர் வரைவது பூனை என்று தெரிகிறது. காது, மூக்கு, கண்கள், வாய் என்று எல்லாம் வரைந்து அழகாக பொம்மை தோசை சுட்டு அதை வாகாக சுருட்டி சட்னி, சாம்பாருடன் பரிமாறுகிறார். குழந்தை வயதில் நாம் சாப்பிட்ட பொம்மை தோசையை இப்போதும் நாம் சாப்பிட அட்டகாசமான ஒரு வாய்ப்பாக இது இருக்கிறது.

பார்த்தாலே சாப்பிட தோன்றும் இந்த தோசை வீடியோவை பகிர்ந்த மனோஜ் குமார், "இந்தியாவின் தெருவோர உணவு விற்பனையாளர்கள் மிகவும் புதுமையான, நெகிழ்ச்சியான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களைக் கொடுப்பவர்கள் என்று நான் நம்புகிறேன்.

எந்த ஒரு நல்ல உணவை சாப்பிடும் போதும் அதன் சமையல் காரரை அதை நினைவில் நிறுத்தும். ஒரு ஊட்டச்சத்து உணவு முறையைப் உருவாக்க அவர்களுடன் எவ்வாறு பணியாற்றுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த இளைஞனின் கலைத் திறன்களைப் பாராட்டுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தோசை பிரியர்கள் மட்டும் அல்லாது, பொம்மை தோசையை நினைத்து ஏங்குபவர்களையும் பெரிதாக ஈர்த்து வருகிறது. தோசை சுடும் கலைஞருக்கு தங்களது பாராட்டுகளையும் தங்கள் பொம்மை தோசை அனுபவங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

First published:

Tags: Food, Trending