Home /News /trend /

கைக்குழந்தையை தோளில் சுமந்து சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் நபர் - நெஞ்சை ரணமாக்கும் வைரல் வீடியோ!

கைக்குழந்தையை தோளில் சுமந்து சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் நபர் - நெஞ்சை ரணமாக்கும் வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral video : ஒரு கையில் குழந்தையை ஏந்தியும், மற்றொரு கையில் சைக்கிள் ரிக்சா போலன்ஸ் செய்து இளைஞர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Bihar, India
    இன்றைக்கு இணையத்தில் வெளியாகும் ஒவ்வொரு விஷயங்களும் டிரெண்டிங் ஆவதோடு, கலாய்க்கும் வகையில் பல கமெண்ட்ஸ்களையும் இணையத்தில் பதிவிடுவது வழக்கமாகிவிட்டது. இதே போன்று தான் நேற்று ட்விட்டரில் வெளியான வீடியோ ட்ரெண்டிங்கில் இருந்தாலும் இணையவாசிகளின் நெஞ்சை ரணமாக்கியுள்ளது. அப்படி என்ன தான் இந்த வீடியோவில் இருந்தது? என நாமும் தெரிந்துக் கொள்வோம். ட்விட்டர் வெளியான வீடியோ மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில் வலம் நபர் தான் இன்றைக்கு சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக உள்ளார்.

    ”பீகாரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் சியோனி மாவட்டத்தில் கன்ஹர்கான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் தங்களது குழந்தைகளுடன் நடைபாதையில் வசித்து வந்துள்ளனர் . இந்நிலையில் தான் அப்பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கைக்குழந்தையும் கணவரையும் விட்டு சென்றதாக செய்திகள் கூறுகிறது. தன்னுடைய மனைவி எங்கே சென்றார் என தேடுவது தேவையில்லாத விஷயம் என்பதால் அந்த முயற்சியில் அவர் ஈடுபடவில்லை.

     

     



     

     

     

    மேலும் தன்னுடைய குழந்தைகளைப் பராமரிப்பதற்கு யாருமே தன்னுடன் இல்லாமல் நிர்கதியாய் நின்ற போதும், எப்படியாவது தனது இரு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியம் அதிகளவில் இருந்துள்ளது. எனவே. தங்களது  வாழ்வாதாரத்திற்காக மத்திய பிரதேசத்திற்கு வந்த ராஜேஷ், தெரிந்த வேலைகளை செய்து வந்துள்ளார். பின்னர் சைக்கிள் ரிக்சா ஓட்டுவது என முடிவெடுத்துள்ளார். ஆனால் தனது குழந்தைகளைப் பார்க்க யாரும் இல்லை என்பதை அவர் அப்போது நினைக்கவில்லை போல. இதனால் தான் குழந்தைகளின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத் தேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்காக, தன்னுடை கைக்குழந்தையை தோளில் சுமந்து சைக்கிள் ரிக்சா ஓட்டி மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் வலம் வருகிறார்.

    ஒரு கையில் குழந்தையை ஏந்தியும், மற்றொரு கையில் சைக்கிள் ரிக்சாவை போலன்ஸ் செய்து சாலையில் வலம் வரும் காட்சியில் நெஞ்சை ரணமாக்குகிறது. அதிலும் குழந்தையின் மேல் ஓட்டுத் துணிக்கூட இல்லை. இந்த காட்சியை வீடியோவாக எடுத்த இணையவாசி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்ட நிலையில் தற்போது வைரலாகிறது.

    ALSO READ | மூக்கால் பலூன் ஊதுவதில் கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்க நபர் - வைரலாகும் வீடியோ!

    இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள், இந்த நபருக்கு நிச்சயம் உதவி செய்ய வேண்டும் எனவும் பார்ப்பதற்கே நெஞ்சை ரணமாக்குகிறது என பதிவிட்டுள்ளனர். மற்றொரு யூசர் ஒருவர், "அவருக்காக ஒரு க்ரவுட் ஃபண்டிங் பிரச்சாரத்தை( இணைய வாயிலா நிதி திரட்டுவது) ஏற்படுத்துவோம்“ எனவும் குறைந்த பட்ச நிதியுதவி அளிக்க முன்வாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு ட்விட்டர் யூசர் எப்படி இந்த நபரை நாம் கண்டுபிடிப்பது? என கேள்வியெழுப்பியுள்ளார். என்னவாயினும் நிச்சயம் இவருக்கு நம் உதவியைக் கொடுக்க வேண்டும் எனவும் இணையவாசிகள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Bihar, Trending, Viral Video

    அடுத்த செய்தி