Viral Video : தண்ணீருக்கு தவித்த கழுகிற்கு தாகம் போக்கிய வழிபோக்கர்கள் - வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

தாகத்துடன் இருந்த கழுகுக்கு தண்ணீர் கொடுத்த குழுவினரை இணையவாசிகள் பாராட்டியுள்ளனர். மனித சமூகத்தின் நடமாட்டம் குறைந்துள்ளதால் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தேவையான உணவுகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
தண்ணீர் தேடி அலைந்த கழுகு ஒன்றுக்கு நெடுஞ்சாலையில் சென்ற வழிப்போக்கர்கள் பாட்டிலில் தண்ணீர் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் மனிதகள் சமூகத்தை கடுமையாக பாதித்து வருகிறது. இந்த கொடூர வைரஸிடம் இருந்து மீண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வாளர்கள் இரவு பகலாக ஆராய்ந்து வருகின்றனர். மனிதர்களின் நடமாட்டம் குறைந்துள்ளதால் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தேவையான உணவுகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பறவை ஆர்வலர்கள் பலர் நாள்தோறும் கடற்கரை, கோவில்கள், மலைப் படிகட்டுகள், பூங்காக்களில் பறவைகளுக்கு தேவையான தானியங்கள் மற்றும் அரிசிகளை இரையிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். கொரோனா அச்சம் காரணமாக, அவர்களும் வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர்.

ALSO READ | வைரல் வீடியோ : முறிந்து விழுந்த மரத்திலிருந்து எஸ்கேப் ஆன பெண்!

இதனால், பறவைகள் மற்றும் குரங்குகள் தண்ணீர் மற்றும் இரை கிடைக்காமல் தவிக்கின்றன. இந்த சூழலில் நெடுஞ்சாலை ஒன்றில் நடந்து சென்ற ஒரு குழுவினர், கழுகு ஒன்றுக்கு தண்ணீர் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

  

டிவிட்டரில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், தாகத்துடன் நீண்ட நேரம் போராடிய கழுகு ஒன்றுக்கு பாட்டிலில் உள்ள தண்ணீரை ஒருவர் கொடுக்கிறார். மிகுந்த தாகத்துடன் இருக்கும் கழுகு மெதுவாக தண்ணீரை பருகுகிறது. அருகில் மேலும், இரண்டு பேர் இருக்கின்றனர். பெண்மணி ஒருவர், பாட்டிலில் கழுகு தண்ணீர் குடிப்பதை வீடியோவாக பதிவு செய்கிறார். அவர்களின் இந்த செயல் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தாகத்துடன் இருந்த கழுகுக்கு தண்ணீர் கொடுத்த அந்த குழுவினரை இணையவாசிகள் பாராட்டியுள்ளனர். வீடியோ பதிவு செய்யப்பட்ட இடம் குறிப்பிடப்படவில்லை. ஆனால், வீடியோவில் பதிவாகியிருக்கும் காட்சிகளின் அடிப்படையில், வெளிநாட்டில் உள்ள நெடுஞ்சாலையில் சென்ற குழுவினரிடம் கழுகு தண்ணீர் பருகியுள்ளது.

ALSO READ | நம்பர் 1 இடத்தில் ரம்யா பாண்டியன்... பத்மா சேஷாத்திரி பள்ளி குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.. இன்றைய ட்ரெண்டிங் இவை தான்!

பறவைகள் தண்ணீருக்காக அலைவது சூழலியலில் ஏற்பட்டுள்ள பேராபத்தை உணர்த்துவதாக இருப்பதாகவும், உலகளவில் சுற்றுச்சூழல் குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மனித சமூகம் இருப்பதாகவும் நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

தொழில் புரட்சி மற்றும் நாடுகளுக்கு இடையிலான போட்டியில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்வாதாரம் குறித்து போதுமான அக்கறையை செலுத்தவில்லை எனக் கூறியுள்ள நெட்டிசன்கள், அனைத்து நாடுகளும் இதனை வெளிப்படையாக விவாதித்து உலகளாவிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

ALSO READ | முதலை மேல் ஜாலியாக சவாரி செய்யும் இளைஞர்- சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

டிவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள கழுகு தண்ணீர் குடிக்கும் வீடியோ 24 மணி நேரத்துக்குள்ளாக 52 ஆயிரம் பார்வைகளையும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. மனிதரிடம் வந்து கழுகு தண்ணீர் அருந்துவது புதுமையாகவும், வியப்பாக இருப்பதாகவும் பலர் கூறியுள்ளனர்.

கழுகுக்கு தண்ணீர் கொடுத்தவர்கள் ரஷ்ய மொழி பேசுவதாகவும், அவர்கள் தண்ணீர் கொடுக்கவில்லை, வோட்காவை கொடுத்துள்ளனர் என்றும் சில நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: