பசியால் சாலையில் இறந்து கிடந்த நாயின் சடலத்தை சாப்பிட்ட நபர் - இதயத்தை நொறுக்கும் வீடியோ

டெல்லி நோக்கி தான் சென்றுகொண்டிருக்கும்போது ஷாஹ்புரா பகுதியில் இறந்துகிடக்கும் விலங்கை ஒருவர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

பசியால் சாலையில் இறந்து கிடந்த நாயின் சடலத்தை சாப்பிட்ட நபர் - இதயத்தை நொறுக்கும் வீடியோ
தொழிலாளர்
  • Share this:
டெல்லி - ஜெய்பூர் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் சடலத்தை பசியால் வாடிய ஒருவர் சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் மனதையும் கலங்கச் செய்துவருகிறது.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 50 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக தொழிலாளர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். அதனால், வெவ்வெறு மாநிலங்களில் புலம் பெயர்ந்து வேலை செய்துவரும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நடந்தே தங்களது மாநிலத்துக்குச் சென்ற நிகழ்வுகள் இந்தியாவை உலுக்கிஎடுத்தது.

இந்தநிலையில், ஜெய்பூரைச் சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்ற என்பவர் மே 18-ம் தேதி யூட்யூப்பில் பதிவிட்ட வீடியோ பலரை இதயத்தை உலுக்கி எடுத்தது. அந்த வீடியோவில் பேசும் பிரதுமன் சிங், டெல்லி நோக்கி தான் சென்றுகொண்டிருக்கும்போது ஷாஹ்புரா பகுதியில் இறந்துகிடக்கும் விலங்கை ஒருவர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.


பின்னர், அவர் அருகே சென்று நருகா சாப்பிடுவதற்கு உணவு அளித்தார். இதுகுறித்து ஃபேஸ்புக் பதிவிட்ட நாருகா, ‘பசியின் காரணமாக தொழிலாளர் ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. யாரும் இவருக்கு உதவுவதற்காக வாகனங்களை நிறுத்தவில்லை என்பதுதான் மோசமான ஒன்று. நான் அவருக்கு உணவும் தண்ணீரும் அளித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.Also see:
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading