• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 'ஈ சாலா கப் நமதே' விருதை கேட்டு வாங்கிய விராட் கோலி - இணையத்தில் கவனம் பெறும் நகைச்சுவை வீடியோ

'ஈ சாலா கப் நமதே' விருதை கேட்டு வாங்கிய விராட் கோலி - இணையத்தில் கவனம் பெறும் நகைச்சுவை வீடியோ

விருதை கேட்டு வாங்கிய விராட் கோலி

விருதை கேட்டு வாங்கிய விராட் கோலி

'ஈ சாலா கப் நமதே' என விராட்கோலியின் ரசிகர்கள் இணையத்தில் நகைச்சுவையாக கடந்த 2019ம் ஆண்டு நடந்த சம்பவ வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

  • Share this:
    ஐபிஎல் 2021 தற்போது நடந்து கொண்டிருக்கும் வேலையில் இணையத்தில் விராட் கோலி ஒரு டெஸ்ட் போட்டியில் பேட் செய்ததற்காக விருதைப் பெறும் பழைய வீடியோ வைரலாகி வருகின்றது.

    கடந்த 2019ம் ஆண்டு நடந்து முடிந்த போட்டி ஒன்றில் விராட் கோலி விருது வாங்கும் போது விருதினை வழங்குபவர் விராட்கோலிக்கு கை கொடுத்து விட்டு விருதினை வழங்காமல் கேமராவிற்கு போஸ் கொடுத்தபடி நின்றார். இந்த சம்பவத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட கோலி, சிரித்து கொண்டே நகைச்சுவையாக விருதினை வாங்கிச் சென்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.



    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் 39-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை அணியும், பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலியும், தேவ்தத் படிக்கல்லும் களமிறங்கினர். படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றினர். மறுபுறம் கோலி நிதானமாக ஆடி ரன் சேர்த்தார்.கோலி, பரத், மேக்ஸ்வெல், ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்த நிலையில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களைக் குவித்தது.

    ஐ.பி.எல் அணிகளில் மிக வலிமையான அணியாகப் பார்க்கப்பட்ட மும்பை அணி 18.1 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் வெற்றியைத் தொடர்ந்து இணையத்தில் விராட்கோலியின் குறும்புத் தன வீடியோக்களை ஆர்.சி.பி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: