பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்று நிறுத்திய பெண் - வைரல் வீடியோ

பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்காக பேருந்தை விரட்டி சென்று நிறுத்திய பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்று நிறுத்திய பெண் - வைரல் வீடியோ
வீடியோ காட்சிகள்
  • Share this:
கொரோனா அச்சத்தினால் பொதுமக்கள் பலர் தெரிந்தவர்களுக்கே உதவி செய்ய அச்சப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளனது. இந்நிலையில் பெண் ஒருவர் யார் என்று தெரியாத மாற்றுத்திறனாளி ஒருவருக்காக பேருந்தை விரட்டி சென்று நிறுத்தி அவரை கையைப்பிடித்து அழைத்து வந்து பேருந்துக்குள் ஏற்றிவிட்டுள்ளார்.

சில வினாடிகளே இருக்கும் இந்த வீடியோவை ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக கே.ஜி.எப் படத்தில் தாய்ப்பாசத்திற்கு போடப்பட்ட பின்னணி இசை சேர்க்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் இருக்கும் பெண் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுப்ரியா என்பது கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமாக வேலை முடிந்து வீட்டிற்கும் திரும்பும் வழியல் பார்வையற்ற அவருக்கு இந்த உதவியை செய்துள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் அந்த பகுதியில் உள்ள ஒரு மொட்டை மாடியில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பேருந்தை பிடிக்க அவர் மூச்சு இழைக்க ஓடி வந்ததும், அதே வேகத்தில் மீண்டும் சென்று அந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியை பேருந்தில் அவர் ஏற்றிவிடுவதும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

கொரோனா காலக்கட்டத்திலும் சற்றும் அஞ்சாமல் அந்த பெண் உதவிய மனிதாபிமான செயலுக்கு அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading