ஆர்பாட்டங்களுக்கு மத்தியில் ஆம்புலன்சுக்கு வழிவிட்ட ஜாமியா மாணவர்கள் - நெகிழ வைக்கும் வீடியோ

ஆர்பாட்டங்களுக்கு மத்தியில் ஆம்புலன்சுக்கு வழிவிட்ட ஜாமியா  மாணவர்கள் - நெகிழ வைக்கும் வீடியோ
  • News18 Tamil
  • Last Updated: December 18, 2019, 12:10 PM IST
  • Share this:
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழிவிட்ட வீடியோ அனைவரது மனதையும் வென்றுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியிலுள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது, காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, மற்ற மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஆம்புலன்ஸ் செல்வதற்காக மாணவர்கள் ஒன்றிணைந்து வழிவிட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் எந்த வித இடையூறு இல்லாமல் சென்ற காட்சி அனைவரது மனதையும் வென்றுள்ளது.

மேலும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து நடத்தும் மனிதசங்கிலி போராட்டம், ஆர்பாட்டங்களில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் உள்ளனர். அந்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
First published: December 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading