ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ராட்சத பூசணிக்காயை அடித்து நொறுக்கி விளையாடும் யானைகளின் க்யூட் வீடியோ!

ராட்சத பூசணிக்காயை அடித்து நொறுக்கி விளையாடும் யானைகளின் க்யூட் வீடியோ!

ஹாலோவீன் பண்டிகையைக் கொண்டாடும் யானை

ஹாலோவீன் பண்டிகையைக் கொண்டாடும் யானை

யானைகள் எப்போதும் குழந்தைகளை போல் நடந்து கொள்ளும் என்று சொல்வார்கள். இந்த வீடியோவை பார்க்கும் போது அது உண்மைதான் என்று தோன்றும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai |

  அக்டோபர் மாதம் மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையை விலங்குகளும் கொண்டாடும் அழகிய வீடியோக்கள் இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கின்றன.

  அமெரிக்காவில் உள்ள மில்வாக்கி கவுன்டி மிருகக்காட்சிசாலையில் உள்ள மூன்று யானைகள் ராட்சத பூசணிக்காயை அடித்து நொறுக்குவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. ஒரு நிமிடம், 40 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை மில்வாக்கி கவுண்டி மிருகக்காட்சி சாலை அக்டோபர் 26 அன்று அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

  வீடியோவில், மூன்று ஆப்பிரிக்க யானைகள் பூசணிக்காயை தங்கள் தந்தங்களால் குத்தி உடைத்து, அவற்றை தங்களது கால் மற்றும் துதிக்கையின் உதவியால் சில்லுகளாக மாற்றுகின்றன. பின்னர் அவற்றை எடுத்து வாயில் போட்டு ரசித்து ருசிக்கும் காட்சி பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்கிறது.

  யானைகள் எப்போதும் குழந்தைகளை போல் நடந்து கொள்ளும் என்று சொல்வார்கள். இந்த வீடியோவை பார்க்கும் போது அது உண்மைதான் என்று தோன்றும்.பார்ப்பதற்கு பெரிய விலங்குகளாக இருந்தாலும் பூசணிகளை உடைத்து சாப்பிடும் முறைகள் எல்லாம் அவற்றின் குழந்தைத்தனத்தையே வெளிப்படுகிறது.

  இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் மற்றும் ரியாக்ஷன்களை குவித்துள்ளது.

  நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி , மிருகக்காட்சிசாலையில் உள்ள சிங்கங்கள் உட்பட மற்ற விலங்குகளுக்கும் செறிவூட்டும் நோக்கத்திற்காக பூசணிக்காய் வழங்கப்பட்டது. 347 பவுண்டுகள் (157.3 கிலோ), 364 பவுண்டுகள் (165.1 கிலோ), மற்றும் 576 பவுண்டுகள் (261.2 கிலோ) எடைகொண்ட மூன்று பூசணிக்காய்கள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Elephant, Halloween, United States of America, Viral Video