ஒர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறை: மணமேடையில் லேப்டாப்புடன் மணமகன்- வைரலாகும் மணமகளின் ரியாக்ஸன் வீடியோ

திருமணத்தில் லேப்டாப் பயன்படுத்தும் மணமகன்

மணமேடையில் லேப்டாப்புடன் மணமகன் இருக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகிவருகிறது.

 • Share this:
  சீனாவின் வூஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பரவத் தொடங்கியது கொரோனா பாதிப்பு. அப்போது தொடங்கிய பாதிப்பு தற்போதுவரை உலக நாடுகளைக் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. உலக பல நாடுகளையும் கொரோனா இரண்டாவது அலை புரட்டி எடுத்த நிலையில், மூன்றாவது அலையை எப்படி எதிர்கொள்வது கவலையுடன் இருக்கின்றன. கொரோனா பாதிப்பின் காரணமாக, அனைவரும் வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

  அதனால், தொழில்கள் அனைத்தும் முடங்கும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும், ஐ.டி போன்ற கணினியில் பணி இருக்கும் துறைகள் கொஞ்சம் தப்பித்தன. அவர்கள், வீட்டிலிருந்து பணி(Work from home) எனும் முறையை அறிமுகப்படுத்தின. கொரோனா முன்பே, வீட்டிலிருந்து பணி என்பது ஐ.டி துறைகளுக்கு பழக்கம்தான் என்றாலும், கொரோனாவுக்குப் பிறகு முழு நேர வீட்டிலிருந்து பணி என்றானது.
  அதனால், எல்லா இடத்திலும், லேப்டாப்பை கொண்டு வந்து வேலை செய்வதைப் பார்க்க முடிந்தது. அதில், தற்போது உச்சகட்டமாக, திருமணம் செய்யும் மாப்பிள்ளை ஒருவர் மணமேடையில் உட்கார்ந்துகொண்டு கணினியை வைத்துக்கொண்டு வேலைபார்க்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த திருமண வீடியோ மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவுக்கு கமெண்ட் பதிவிடும் பலரும், ‘உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையா என்பதுபோல நகைச்சுவையாக பதிவிட்டுவருகின்றனர்.
  Published by:Karthick S
  First published: