• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பெண்ணின் மடியில் அமர்ந்து தூங்கும் மலைப்பாம்பு - இணையத்தில் வைரலாகும் வீடியோ

பெண்ணின் மடியில் அமர்ந்து தூங்கும் மலைப்பாம்பு - இணையத்தில் வைரலாகும் வீடியோ


வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

ஒரு மாபெரும் மலைப்பாம்பு ஒரு பெண்ணின் மடியில் தூங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share this:
    இளம்பெண் ஒருவர் வீட்டின் வாசலில் அமர்ந்து தனது மொபைல் போனை நோண்டிக்கொண்டிருக்கையில் மலைப்பாம்பு ஒன்று பெண்ணின் மடியில் அமர்ந்து தூங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    20 அடி நீளமுள்ள பாம்பு தன் தலையை பெண்ணின் மீது வைத்துள்ளது. அப்பெண்ணும் பாம்பின் தலையை தடவி கொடுக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப்பெண் மலைப்பாம்பினை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றாள்.



    சமீபத்தில் தாய் யானை தனது குட்டியை தூக்கத்தில் இருந்து எழுப்ப முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாய் யானை தூங்கிக் கொண்டிருக்கும் குட்டியை எழுப்ப கடுமையாக முயன்றும் பலனில்லை. இறுதியில், யானை காப்பாளர்கள் தான் குட்டியை தூக்கத்தில் இருந்து எழுப்ப வருகிறார்கள். ட்விட்டரில் இந்த வீடியோ வைரலாகி வந்தது.



    இதனைத் தொடர்ந்து ஆட்டுக்குட்டி ஒன்று சிறுமி ஒருவர் பள்ளிக்கு செல்லும் வழியில் அவரோடு சேர்ந்து அவர் வீட்டு ஆட்டுக்குட்டியும் ஆனந்தமாய் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.

     

     



     

    இணையத்தில் வைரலாகும் குறுகிய கிளிப்பில், சிறுமி ஒருவர் ஒரு அழகிய மலைப் பகுதியில் சந்து வழிகளில் சுற்றி பள்ளிக்கு செல்வது போல் உள்ளது. அவள் பள்ளி சீருடை அணிந்திருந்தாள் மற்றும் தனது கூந்தலை பள்ளிக்கு செல்லும் நோக்கில் அழகாக கட்டியிருந்தாள். வீடியோவில் இணையவாசிகளை மகிழ்வுற வைத்துள்ளது ஆடு தான். "பள்ளிக்குச் செல்லும் இரண்டு நண்பர்கள்," என விடீயோவின் தலைப்பில் பதிவிட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: