பண்டிகைக்கால கடமை முடிந்தது... ஓய்வாக கால்பந்து விளையாடி மகிழும் யானைகள்...! வைரல் வீடியோ

விளையாடும் யானைகள்

ட்விட்டர்வாசிகள் பலரும் ‘இந்திய அணி தயாராகிவிட்டது’ எனப் பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மைசூரு தசரா திருவிழாவில் பங்கேற்ற யானைகளுக்குத் தற்போது ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால் அனைத்து யானைகளும் ஒன்றிணைந்து கால்பந்து விளையாடி மகிழும் வீடியோ வைரலாகி வருகிறது.

தசரா திருவிழா ஊர்வலங்களில் பிஸியாகி ஓய்வு முகாம்களுக்கு யானைகள் திரும்பி உள்ளன. தினமும் ஆற்றுக் குளியல், ஓய்வு என்றிருந்த முகாமில் நேற்று கால்பந்து விளையாட்டுப் போட்டி யானைகளுக்குள் நடைபெற்றது. இதில் முகாமில் இருந்த 29 யானைகளும் பங்கேற்று அசத்தின.



இந்த யானைகள் பங்கேற்று விளையாடிய வீடியோ காட்சிதான் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ட்விட்டர்வாசிகள் பலரும் ‘இந்திய அணி தயாராகிவிட்டது’ எனப் பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் பார்க்க: மேம்பாலத்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட விமானம்..! நகர முடியாமல் திணறும் வைரல் வீடியோ

தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம் - முழு விவரம்
Published by:Rahini M
First published: