படிக்கட்டுகளில் லாவகமாக ஏறிச் செல்லும் யானை - வைரல் வீடியோ

படிக்கட்டுகளில் லாவகமாக ஏறிச் செல்லும் யானை - வைரல் வீடியோ
யானை
  • Share this:
யானை ஒன்று படிக்கட்டுகளில் அழகாக ஏறிச் செல்லும் வீடியோ இந்திய வனத்துறை அதிகாரி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் யானை ஒன்றின் வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தண்ணீர் இல்லாத வாய்க்கால் போன்ற ஒரு நீர் வழித்தடம் போன்ற பகுதியிலிருந்து தன்னுடைய இடத்துக்குச் செல்வதற்கு அதன் மேல்கரைக்கு யானை ஒன்று மிகவும் சிரமப்பட்டு படிவழியாக ஏறுகிறது.

அந்த யானை மிகவும் புத்திசாலித்தனமாக ஒடுக்கமான படிக்கட்டுகள் வழியாக ஏறினாலும் ஏறுவதற்கு யானை மிகவும் சிரமப்பட்டது. 32 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ ட்விட்டரில் வைரலானது. இந்த வீடியோவை பதிவிட்டுள்ள வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான், ‘யானை படிக்கட்டுகளைப் பயன்படுத்துகிறது. அதற்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளது? அந்த யானையின் கடைசிப் பார்வை நிறையவற்றை உணர்த்துகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.






இந்த வீடியோவைப் பார்க்கும், ‘வளர்ச்சியின் பெயரால் விலங்குகளின் வாழிடங்களை அழித்து வருகிறோம். வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் அரசு பலமுறை சிந்திக்கவேண்டும்’ என்றும் பதிவிட்டுவருகின்றனர்.

Also see:

First published: February 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading