மணப்பெண்ணை சுத்தி சுத்தி போட்டோ எடுத்த போட்டோகிராபர்.. கடுப்பாகி மணமகன் செய்ததை நீங்களே பாருங்கள்.. வைரல் வீடியோ

வைரல் வீடியோ

திருமண விழா மேடையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 • Share this:
  திருமணம் என்றாலே சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழக்கை துவக்கத்தை குறிக்கிறது. மேலும் பல திருமண விழாக்களில் சில சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்வது சகஜம் தான். இருப்பினும் சில சம்பவங்கள் மக்கள் மனதை கொள்ளையடிக்கும் வகையில் நிகழும். அந்த வகையில் இங்கு ஒரு திருமண விழாவில் நடந்த சம்பவம் சமூக ஊடகங்களில் அனைவரின் மனதையும் கொள்ளையடித்துள்ளது. மேலும் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. 

  சுமார் 45 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ பிப்ரவரி 5 ஆம் தேதி ட்விட்டரில் பகிரப்பட்டது. மேலும் இணையத்தில் சிரிப்பு கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். திருமண விழாவின் போது படமாக்கப்பட்ட இந்த வீடியோவில் மணமகனும், மணமகளும் மேடையில் ஒன்றாக நின்று கொண்டிருக்கும் தருணங்களை போட்டோகிராபர் பதிவு செய்து வருகிறார். அப்போது, மணமகனை தள்ளி நிற்க சொன்ன போட்டோ கலைஞர், மணமகளை மட்டும் போட்டோ எடுத்து வந்துள்ளார். அதுவும் மணமகளுக்கு மிக அருகில் சென்று புகைப்படங்களை எடுத்து வந்துள்ளார். குனிந்த தலை நிமிராமல் நின்ற மணமகளின் கன்னத்தை பிடித்து மேல்நோக்கி பார்க்க செய்துள்ளார்

  இதனை பொறுமையாக தள்ளி நின்று பார்த்து கொண்டிருந்த மணமகன் ஆத்திரம் தாங்காமல் கேமராமேன் முதுகில் பளார் என ஒரு அடி வைத்து விட்டு, "ஏன் உன்னால் அங்கிருந்து போட்டோ எடுக்க முடியாதா? என கோபமாக கேட்டு மேடையில் இருந்து நகர்கிறார். மணமகளோ சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் மேடையிலேயே விழுந்து விழுந்து சிரித்துள்ளார். போட்டோகிராபர் முதலில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய நிலையில், மணமகள் சிரித்தவுடன் அங்கிருந்து சிரித்தபடி விலகியுள்ளார். மேலும், இந்த சம்பத்தை பார்த்த உறவினர்கள் அனைவரும் சிரித்துள்ளனர். மணமகன் கோபமாக மேடையில் இருந்து கீழே இறங்கிச் சென்றுள்ளார்இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. மணமகனின் உணர்வுகளை புரிந்து கொள்ளமுடிகிறது என்றும் மணமகனின் செயலை விரும்பியதாகவும் நெட்டிசன்கள் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

   

     இந்த வீடியோ சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டது. 10,000க்கும் மேல் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. மேலும், 41,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றது. இந்த வீடியோ பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. வீடியோவில் மணமகளின் சிரிப்பு கலவரத்தில் சேராமல் இருக்க முடியவில்லை என்று பல ட்விட்டர் யூசர்கள் பதிவிட்டுள்ளனர். சிலர், மணமகனின் ரியாக்சனை பார்க்க மணமகள் பிராங்க் செய்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: