Home /News /trend /

Video | நிவின் பாலியின் புதிய படத்தின் பாடலுக்கு பாதிரியார் கலக்கல் நடனம்...!

Video | நிவின் பாலியின் புதிய படத்தின் பாடலுக்கு பாதிரியார் கலக்கல் நடனம்...!

வீடியோ காட்சிகள்

வீடியோ காட்சிகள்

  • News18
  • Last Updated :
    நடிகர் நிவின் பாலியின் புதிய படத்தின் பாடல் ஒன்றுக்கு டெல்லி தேவாலய பாதிரியார் ஒருவர், நடனமாடி வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

    நடிகர் நிவின்பாலி நடிப்பில் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்ற மலையாள திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது.

    இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள குடுக்கு என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது. பல இளைஞர்கள் இந்த பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகர் நிவின்பாலி நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் குடுக்கு பாடலுக்கு 2 இளைஞர்களுடன் சேர்ந்து ஒரு பாதிரியாரும் ஆடுவதாக இருந்தது.

    டெல்லியில் உள்ள தேவாலயத்தின் பாதிரியார் மேத்யூ கிஷாசேக்ரியா அங்குள்ளவர்களுடன் நடனம் ஆடியிருந்தார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது.






    View this post on Instagram


    Father Mathew Kizhackechira from New Delhi dancing to #Kudukkusong tune with his team. Thank you Father! 🙏😍


    A post shared by Nivin Pauly (@nivinpaulyactor) on






    மேலும், அவர் பேஸ்புக் பக்கத்திலும் சில வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

    Published by:Sankar
    First published:

    Tags: Nivin Pauly

    அடுத்த செய்தி