Home /News /trend /

மனிதரை நோக்கி சீறி பாயும் முதலை.! நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகும் பயங்கர வீடியோ.!

மனிதரை நோக்கி சீறி பாயும் முதலை.! நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகும் பயங்கர வீடியோ.!

முதலை வீடியோ

முதலை வீடியோ

Crocodile Viral Video | இன்டர்நெட் மற்றும் சோஷியல் மீடியாக்கள் பல வகையான வைரல் வீடியோக்களால் நிரம்பி இருக்கிறது. அவற்றுள் சில பார்ப்பதற்கு அற்புதமானவையாக இருக்கும். ஒரு சில நெஞ்சை பதற வைப்பது போல இருக்கும். அந்த வகையில் முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் வகையிலான பயங்கரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மனிதர்கள் மிகவும் பயப்பட கூடிய ஒரு சில விலங்குகளில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுவது முதலை. இதன் வலுவான மற்றும் கரடு முரடான சருமம் மற்றும் கூர்மையான பற்கள் பார்க்கும் நம்மை மிரட்டும் வகையில் இருக்கும். பெரும்பாலும் தண்ணீரில் காணப்படும் முதலை நிலத்தில் ஒப்பீட்டளவில் மிகவும் மெதுவாகவே இயங்குகிறது. நீரில் முதலைகள் இருப்பதையும், நிலத்தில் அவை இருப்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் மிகவும் சோம்பேறி போல இருக்கிறதே என்று நினைக்க தோன்றும்.

ஆனால் உண்மையில் நில பரப்பில் கூட முதலைகள் தண்ணீரில் இருப்பதைப் போலவே மிகவும் பயங்கரமாக மற்றும் ஆக்ரோஷமாக செயல்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், அவை நினைத்தால் நிலத்தில் கூட அதிவேகமாக செயல்பட முடியும். சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோ இதனை உண்மை என்று நிரூபித்து உள்ளது. சுவாரசியமான இந்த வீடியோவில் முதலை சீறிப்பாயும் காட்சிகள் அடங்கி இருக்கிறது.

பிரபல ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள இந்த பயங்கர வீடியோவில், அடைப்புக்குள் ஒரு முதலை நபர் ஒருவரை நோக்கி சீறி பாய்ந்து ஓடுவதை காண முடிகிறது. முதலை அதன் வாயை பிளந்து கொண்டு அந்த நபரை நோக்கி நிலத்தில் நாம் இதற்கு முன் (முதலையிடம்) பார்த்திராத வேகத்தில் ஓடுவதையும் காணலாம்.



இந்த வைரல் வீடியோ கடந்த ஆகஸ்ட் 18,2022 அன்று அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தீம் பார்க் கேட்டர்லேண்டாலின் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யப்பட்டதாகும். இந்த வீடியோவிற்கு கேப்ஷன் "CHAINSAW IN ACTIONOur Amazing Cuban Crocodile!" என்று கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வீடியோ சுமார் 1.3 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும், 8000 லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.

Also Read : மரணமே இல்லாத விலங்கா? விலங்குகள் பற்றி நாம் அறியாத சுவாரஸ்ய செய்திகள்..

இந்த வைரல் வீடியோவை பார்த்த பல யூஸர்கள் சீறி பாயும் முதலையின் வேகத்தை பார்த்து மிகவும் பயந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள். இதுவரை நான் பார்த்த முதலைகளில் இது மிகவும் பயங்கரமானது என்று ஒரு யூஸர் கூறியிருக்கிறார். மற்றொரு யூஸர் முதலை இவ்வளவு வேகமாக ஓடி நான் பார்த்ததில்லை, அற்புதம் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு யூஸர் நம்பமுடியாத மற்றும் பயமுறுத்தும் வீடியோ என்றார். இதனிடையே இந்த வைரல் வீடியோவில் காணப்படும் கியூபா முதலை அளவில் சிறியதாக இருந்தாலும் மிகவும் ஆக்ரோஷமானவை எனவே இவை மிகவும் ஆபத்தானவை என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Crocodile, Trending, Viral Video

அடுத்த செய்தி