ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தூர்தர்ஷன்ல இப்படி கிரிக்கெட் பார்த்த அனுபவம் இருக்கா -இணையத்தை கலக்கும் வீடியோ வைரல்

தூர்தர்ஷன்ல இப்படி கிரிக்கெட் பார்த்த அனுபவம் இருக்கா -இணையத்தை கலக்கும் வீடியோ வைரல்

வீடியோ வைரல்

வீடியோ வைரல்

Viral Video | தூர்தர்ஷனில் இப்படி கிரிக்கெட் பார்த்த அனுபவம் இருக்கா என்று அந்த நாட்களின் மறக்க முடியாத வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சைக்கிளை வாடகைக்கு எடுத்து ஓட்டுனது, தெருக்களில் கிரிக்கெட் விளையாடியது, டயர் ஓட்டியது, பம்பரம் விளையாடியது, ஒளியும் ஒலியும் டிவியில் பார்த்தது போன்ற பல அனுபவங்கள் எங்களுக்கு மட்டும் தான் இருக்குன்னு ஒரு குரூப் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அவங்க வேறு யாரும் இல்ல நம்ம 90ஸ் கிட்ஸ் தான்.

  அவர்களின் மறக்க முடியாத இனிமையான அனுபவங்களில் ஒன்று தான் தூர்தர்ஷனும் ஆன்டனாவும். தற்போது உள்ள தொழில்நுட்ப வசதி இல்லாத அந்த காலத்தில் ஆன்டனாவை திருப்பி திருப்பி சிக்னல் வருதா, இப்போ வருதா என்று மொட்டை மாடியிலிருந்து ஒரு சத்தம் வந்து கொண்டே தான் இருக்கும். அப்படி சிக்னல் வந்தும் வீடியோ தெளிவாக இல்லாமல் அலை அலையாக வரும். ஏதோ இதவாது தெரியுதே என்று தான் பலரும் டிவி பார்ப்பார்கள்.

  Also Read : 30 வயது வரை வேண்டாம்.. சிறுமிக்கு டேட்டிங் அட்வைஸ் செய்த அமெரிக்க அதிபர் - வைரல் வீடியோ!

  அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான கிரிக்கெட் வீடியோ தான் அது. சிக்னல் கோளாறு காரணமாக அலை அலையாக வரும் அந்த வீடியோவை பார்த்த உடன் அந்த நாட்களின் இனிமையான அனுபவம் பலருக்கு ஞாபகம் வரும். தற்போதைய தலைமுறை பலர் இந்த அனுபவத்தை சந்திக்காவிட்டாலும் வீடியோ மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று ஆனந்த் மஹேிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

  ஆனந்த் மஹேிந்திரா மட்டுமல்ல இணையத்தில் பலர் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். ஆனந்த் மஹேிந்திரா பதிவிட்டுள்ள வீடியோவுக்கு 33,000-க்கும் மேற்பட்ட லைக்ஸ் குவிந்துள்ளது. மேலும் அது ஒரு வசந்தகாலம், அந்த நாட்களை மறக்க முடியுமா, அந்த பொன்னான அனுபவம் வேறு யாருக்கும் கிடைக்காது என்று பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral