Home /News /trend /

மணமேடையில் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்ட மணமக்கள்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

மணமேடையில் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்ட மணமக்கள்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

சண்டையிடும் மணமக்கள்

சண்டையிடும் மணமக்கள்

திருமணத்தின்போது மணமேடையில் மணமகனும், மணப்பெண்ணும் தீவிரமாக சண்டையிட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் திருமணம் என்பது வாழ்வின் மிக முக்கியமான ஒன்று. திருமண நாள் என்பது வாழ்நாள் முழுவதும் நினைத்து மகிழும் ஒரு நாளாக இருந்து வருகிறது. மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரது வாழ்க்கையில் திருமணத்திலிருந்துதான் புதிய அத்தியாயம் தொடங்குகிறது. எனவே, ஒவ்வொருவரும் அவர்களது திருமணத்தை பிரம்மாண்டமாகவும், ரசனை மிகுந்ததாகவும் இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்வார்கள்.

    கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் என்பது ஒவ்வொரு பகுதிக்கும் வேறு வேறானதாக இருக்கிறது. திருமண சடங்குகளும் அதுபோன்றே ஒவ்வொரு பகுதிக்கும், மதத்துக்கும் வேறு வேறானதாக இருக்கும். நம் கலாச்சாரத்திலிருந்து மாறுபட்ட கலாச்சார கூறு கொண்டவர்களின் திருமண சடங்குகளைப் பார்க்கும்போது ஆனந்தமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். பலரது திருமண முறைகள் நம்மை ஆச்சர்யப்படுத்தும் வகையிலும் உள்ளன.

    இன்றைய சமூக ஊடக காலத்தில் நம்முடைய ஒவ்வொரு நிகழ்வுகளும் வீடியோக்களாக பதிவாகின்றன. குறிப்பாக, சமீப காலங்களாக திருமணத்தில் நடைபெறும் கலாட்டாக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. குறிப்பாக, மணமக்களுக்கு இடையே நடைபெறும் நிகழ்வுகள் இணையத்தில் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. தற்போதும், அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    நேபாளத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு நடைபெற்றத் திருமணத்தின், மணமகனும், மணமகளும் மேடையில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது, ஒருவொருக்கொருவர் யார் முதலில் உணவை ஊட்டுகிறார்கள் என்பது அங்கே உள்ளே பழக்கவழக்கம். இந்த மணமக்கள், உணவு ஊட்டும் போட்டியின்போது ஒருவொரையொருவர் தாக்கும் வகையில் தீவிரமாக மோதிக்கொண்டனர்.



    அதனால், சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், மணமகனும், மணமகளும் இதனை மகிழ்ச்சியுடனேயே எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோவை சுமார் 70,000 பேர் லைக் செய்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் மணமக்களைக் கலாய்த்து கமெண்டுகளைப் பதிவிட்டுள்ளனர்.
    Published by:Archana R
    First published:

    Tags: Nepal, Trending Video, Viral Video

    அடுத்த செய்தி