Home /News /trend /

குழந்தை அழுவதை பார்த்து யானை செய்த செயலால் திக்குமுக்காடிய பார்வையாளர்கள்..

குழந்தை அழுவதை பார்த்து யானை செய்த செயலால் திக்குமுக்காடிய பார்வையாளர்கள்..

கூண்டிற்குள் விழுந்த செருப்பை மீண்டும் குழந்தையிடமே கொடுக்கும் யானை

கூண்டிற்குள் விழுந்த செருப்பை மீண்டும் குழந்தையிடமே கொடுக்கும் யானை

யானையின் கூண்டிற்குள் விழுந்த குழந்தையின் செருப்பை துதிக்கால் எடுத்து மீண்டும் அவர்களிடம் கொடுக்கும் யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    யானையின் உடல் அமைப்பு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பெரியதாக இருப்பினும் உண்மையில் மிகவும் பாசத்துடனும், கருணையுடனும் கூடிய குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில் தான் சீனாவில் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதைத் தொடர்ந்து இதுவரை 1.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று வைரலாகிறது. 


    அந்த காணொளியில் மிருகக்காட்சி சாலையில் யானையைப் பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது குழந்தையின் செருப்பு ஒன்று யானைகள் உள்ள பகுதியினுள் விழுந்து விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற போது தான், யானை குழந்தையின் செருப்பை எடுத்ததோடு, வேலிக்கு வெளியில் உள்ள நபர்களிடம் கொடுக்கிறது. தொடர்ந்து யானைக்காக உணவு வைத்திருப்பவரின் அருகில் செல்கிறது.


    இந்த வீடியோவில் யானை செய்த காரியம், தற்செயலானது என்றாலும் குழந்தை அழுதவுடனே செருப்பை எடுத்து அவர்களின் கையில் கொடுத்தது இணையவாசிகளிடம் டிரெண்டாகியுள்ளது.


    இன்ஸ்டாவில் இந்த பதிவைப்பார்த்த நெட்டிசன்கள், பார்ப்பதற்கே நெகிழ்வாக இருக்கிறது எனவும் யானையின் கருணை குணம் இதில் வெளிப்படுகிறது என்பது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.





     




    View this post on Instagram





     

    A post shared by NowThis (@nowthisnews)





    மற்றொரு பயனர் ஒருவர், மனிதர்களை விட விலங்குகள், தான் வாழும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க நினைக்கும் என்பதால் இந்த செயலை செய்துள்ளது எனவும் இச்செயல் மனதை மகிழ்வாக்குகிறது என்பது போன்ற கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.




    மேலும் மற்றொரு இன்ஸ்டகிராம் பயனர் ஒருவர், எந்தவொரு சுதந்திரம் தனக்கு இல்லை என்றாலும் யானையின் கருணைக்கு அளவே இல்லை என்றும் பார்ப்பதற்கே நெகிழ்வாக இருக்கிறது எனவும் பதிவிட்டுள்ளனர்.


    இந்த வீடியோ இணையத்தில் பதிவிட்ட ஒரே நாளில் 1.3 மில்லியனுக்கும் அதிகமாக லைக்குகளைப் பெற்று நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: China, Elephant, Viral Videos

    அடுத்த செய்தி