உலகில் பல வித வினோத விஷயங்கள் அன்றாடம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் தினமும் பார்க்கும் மனிதர்கள் கூட கற்பனை செய்து பார்க்காத அளவிற்கு வினோதமாகவும், ஆச்சரியமூட்டும் வகையிலும் இருப்பதுண்டு. இப்படிப்பட்ட பல விஷயங்களை நாம் இணையத்தில் கேள்விப்பட்டிருப்போம். அதே போன்று இது போன்ற செய்திகள் விரைவில் வைரலாவதும் வழக்கம். இப்படியொரு வகையை சேர்ந்த வீடியோ ஒன்று தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஆம், ஒரு வினோத மனிதர் தினமும் 2 மலை பாம்புகளுடன் உறங்கி வருவதாக இருக்க கூடிய வீடியோவை தான் தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் யாராக இருந்தாலும் நிச்சயம் திகில் கலந்த பயம் உருவாகும். அந்த அளவிற்கு இது அதிர்ச்சியை கொடுக்க கூடிய வீடியோவாக இருக்கும். நீங்கள் தூங்கி கொண்டிருக்கும் போது உங்களை யாராவது தொந்தரவு செய்தால் அதை நிச்சயம் நீங்கள் தாங்கி கொள்ள மாட்டீர்கள். ஆனால், இந்த மனிதர் தினமும் அச்சுறுத்த கூடிய பிரம்மாண்ட மலை பாம்புகளுடன் உறங்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்.
இரண்டு மஞ்சள் மலைப்பாம்புகளுடன் உறங்குவது போன்ற வீடியோவை இவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், இவர் தூங்கி கொண்டிருக்கும் போது பாம்புகள் அவர் மீது நெலிந்து செல்வதை காணலாம். இருப்பினும் இந்த பிரம்மாண்ட மலைப்பாம்புகள் அவருக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிப்பதில்லை என்பதையும் உங்களால் பார்க்க முடியும். அதே போன்று அந்த மனிதர் இது எதையும் கொஞ்சமும் கண்டு கொள்ளலாம் நிம்மதியாக உறங்குகிறார்.
இந்த திகிலூட்டும் வீடியோவில் உள்ள நபரின் பெயர் பிரையன் பார்சிக் என்பதாகும். இவர் இது போன்ற வனவிலங்குகளுடன் அன்பாக பழக கூடிய பண்பை கொண்டவராக உள்ளார். இவர் இது போன்ற பல வனவிலங்குகள் குறித்த வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அவற்றை தொடர்ந்து தான் இந்த வீடியோவையும் பிரையன் பகிர்ந்துள்ளார். இவரின் பல பதிவுகள் எப்படி இப்படியெல்லாம் இவர் செய்கிறார் என்பதை தூண்டும் விதமாக இருக்கும். இவரின் பதிவுகளை பார்த்து விட்டு பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மலை பாம்புகளுடன் உறங்கும் வீடியோவை பார்த்துவிட்டு, பலரும் அதிர்ந்து போய் கமெண்ட் செய்துள்ளனர்.
View this post on Instagram
Also see... ரயில்வே துறையிடம் ரூ.35 பணத்தை திரும்ப பெற 5 ஆண்டுகள் வழக்கு நடத்தி வெற்றி பெற்ற நபர்
அதிலும் பிரையன் இந்த வீடியோ பதிவிடும் போது குறிப்பிட்ட கேப்ஷன் தான் பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதில், “சில நேரங்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்களுக்குப் பிடித்தவர்களுடன் சிறிது நேரம் தூங்குவது அவசியம்! என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு சிலர் இந்த விபரீத வீடியோவை தவறு என்றும், சிலர் இது சிறப்பான விஷயம் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்து உள்ளனர். மேலும் பலர் லைக் செய்தும் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.