Home /News /trend /

திருடனிடமிருந்து கைக்குழந்தையுடன் தாயைக் காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்.. வீர செயலுக்கு இணையத்தில் குவியும் பாராட்டு.. வைரல் வீடியோ இதோ!

திருடனிடமிருந்து கைக்குழந்தையுடன் தாயைக் காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்.. வீர செயலுக்கு இணையத்தில் குவியும் பாராட்டு.. வைரல் வீடியோ இதோ!

திருடனிடமிருந்து தாய், குழந்தையை கைப்பற்றிய ஊழியர்

திருடனிடமிருந்து தாய், குழந்தையை கைப்பற்றிய ஊழியர்

காரை கடத்த முயன்ற திருடனிடம் இருந்து கைக்குழந்தையுடன் தாயைக் காப்பாற்றிய ஹோட்டல் ஊழியரின் வீடியோ வைரல்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaAmericaAmerica
    அமெரிக்காவில் ஹோட்டல் அருகில் கார் பார்க்கிங்கில் திருடன் கைக்குழந்தையுடன் உள்ள ஒரு பெண்ணின் காரை திருட முயன்றுள்ளான். அப்போது அந்த பகுதியிலிருந்த ஹோட்டல் ஊழியர் திருடனிடம் இருந்து அந்த பெண் மற்றும் குழந்தையை விரைவாக உதவி செய்து காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

    அமெரிக்காவில் புளோரிடாவில் அமைத்துள்ள ஃபோர்ட் வால்டன் கடற்கரை பகுதியில் கிளிக் - எ என்ற ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் காரை எடுக்கச் சென்றுள்ளார். அந்த வேளையில் அவரை தாக்கி அவரின் காரை திருட முயன்ற நபரிடம் இருந்து அந்த பகுதியில் இருந்த ஹோட்டல் ஊழியர் வீரமாகச் செயல்பட்டுக் காப்பாற்றியுள்ளார்.

    இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அந்த இளம் ஊழியர் ஓடி வந்து அந்த திருடனிடம் சண்டை போட்டு தாயையும் குழந்தையும் காப்பாற்றுகிறார். அவரை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் வந்து அந்த திருடனைப் பிடிக்கின்றனர்.



    இளம் ஊழியரின் வீர செயலை அந்த பகுதி ஷெரிப் டிவிட்டர் பக்கத்தில் பாராட்டிப் பதிவிட்டுள்ளார். மேலும் கிளிக்- எ ஹோட்டலும் இளம் ஊழியரின் போட்டோவை பதிவிட்டு பாராட்டைத் தெரிவித்துள்ளது. வீர செயல் புரிந்த இளம் வீரரின் பெயர் மைக்கேல் கார்டன் என்று தெரியவந்துள்ளது.

    Also Read : PMModiBirthday : 56 இன்ச் தாலி, 40 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.8.5 லட்சம் வெகுமதி.. மோடி பிறந்தநாளுக்கு டெல்லி உணவகத்தின் அசத்தல் ஆஃபர்

    பிடிபட்ட திருடன் இது போன்று பல செயல்களில் ஈடுபட்டுள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இணையத்தில் பகிரப்பட்ட வீடியோ 7.9 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து செல்கிறது. மேலும் 34,000 லைக்ஸ், 5000 மேற்பட்ட ரீட்விட் செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஊழியரின் வீர செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Janvi
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி