முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / WATCH - குட்டியைப் பிடுங்கிக் கொஞ்சும் சிறுமி.. செல்லமாகச் சண்டையிடும் தாய் குரங்கு.. வைரல் வீடியோ!

WATCH - குட்டியைப் பிடுங்கிக் கொஞ்சும் சிறுமி.. செல்லமாகச் சண்டையிடும் தாய் குரங்கு.. வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Monkey viral video : தாய் குரங்கிடம் இருந்து குட்டியைப் பிடுங்கிக் கொஞ்சும் சிறுமியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தாய் குரங்கிடம் இருந்து குட்டியைப் பிடுங்கி கொஞ்சம் சிறுமியிடம் செல்லமாகச் சண்டையிடம் தாய் குரங்குவின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் சிறுமியைச் சுற்றி சில குரங்குகள் இருக்கிறது. அதில் ஒரு தாய் குரங்கு தனது குட்டியை மடியில் வைத்துள்ளது. அந்த தாய் குரங்கிடமிருந்து குட்டியை சிறுமி வாங்கி குழந்தை போல் தோளில் மேல் வைத்து கொஞ்சுகிறாள். மீண்டும் தாய் குரங்கு சிறுமியிடமிருந்து குட்டியை வாங்கிக்கொண்டு செல்லும் போது, சிறுமி விடாப்பிடியாகக் குட்டியை வாங்க முயற்சி செய்யும் காட்சி நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வீடியோவை பார்க்க :

சிறுமி குட்டியை விடாப்பிடியாக பிடுங்கவும் கூட தாய் குரங்கு கோவப்படாமல் குட்டியை நெருக்கமாக பிடித்துக்கொள்கிறது. இந்த வீடியோவை பகிர்ந்த ஊடக எழுத்தாளர், ”இந்தியாவில் மட்டும் தான்” குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Monkey, Viral Video